ஏப்ரல்-18. கோயம்புத்தூில் குடும்பப் பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்திய சாமியார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ககப்படுகிறது.
கோவை மாநகர போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் அதே ஊரைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவர் கொடுத்துள்ள புகார் சாமியாருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட அந்தப் பெண் கணவர் கார்த்திக் உடன் ஐதராபாத் நகரத்தில் வசித்து வந்து உள்ளார்.அவர்களுக்கு ஆறு ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதனால் விரக்திக்கு ஆளான கணவர், மத்தியபிரதேச மாநிலத்திற்குச் சென்று பிரபுதானந்தா என்ற சாமியார் ஒருவரை அழைத்து வந்துள்ளார். அவர்,பிள்ளைப் பிறப்பதற்கான பூஜைகளை செய்து விட்டுச் சென்றுவிட்டார்.
கொஞ்ச நாள் கழித்து அந்த சாமியார் பெங்களூரு வந்த போது அவரைப் பார்ப்பதற்கு கார்த்திக் தமது மனைவியை அழைத்துக் கொண்டு சென்று இருக்கிறார். அப்போது தனி அறையில் வைத்து இந்தப் பெண்ணுக்கு பூஜை செய்த சாமியார் பிரபுதானந்தான, அவருடைய ஆசைக்கு இணங்குமாறு வலியுறுத்தினார். இந்த பெண் மறுத்துவிட்டார். உடனே சாமியார், தன்னுடன் உறவு கொண்டால்தான் பிள்ளைப் பேறு கிடைக்கும் என்று ஆசை வார்த்தைக் கூறியிருக்கிறார். பயந்துப் போன பெண்மணி பூஜையும் வேண்டாம் ஒன்னும் வேண்டாம் என்று சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியில் வந்து விட்டார்.
தனி அறையில் சாமியார் விரித்த வலை பற்றி பெண்மணி கணவர் கார்த்திக்கிடம் சொல்லி அழுதபோது, அவரோ பதில் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்துவிட்டார். இதனால் கோபம் அடைந்த பெண்மணி பெட்டியை எடுத்துக் கொண்டு கோயம்புத்தூரில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். கொஞ்ச நாள் கழித்து மீண்டும் ஐதராபாத் சென்ற போது அவரை,கார்த்திக் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.அப்போது செல்போனில் தொடர்பு கொண்ட சாமியார், தன்னுடைய ஆசைக்கு இணங்கினால்தான் உன்னை உன் கணவருடன் வாழ விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இப்படி புகார் கொடுத்து உள்ள அந்த பெண், பிரபுதானந்தா மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டு இருக்கிறார். இது பற்றி கோவை கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். இதனால் மத்தியப் பிரதேச சாமியார் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.