குவாரித் தொழிலுக்கு நெருக்கடி தந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கடத்த சதி.. அதிமுக புகார்.

முறையாக அனுமதி பெற்ற கல்குவாரி, கிரஷர், எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காண திமுக அரசு துடிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில், 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அரசியல் தலையீடுகள் இல்லாமல் குவாரிகள் இயங்கி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த சில தினங்களாக சுற்றுச்சூழல் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் தேவையற்ற ஆய்வுகளைச் செய்து,குவாரிகளை முடக்கப் பார்ப்பதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிப்பதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இப்படி திமுக அரசு கொடுத்த நெருக்கடிகளால், தொழில் முடங்கி, உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அனைத்து குவாரிகளுக்கும் 30 ஆண்டுகளுக்கு சுற்றுச்சூழல் மற்றும் குவாரி அனுமதி வழங்க வேண்டும், குவாரி உரிமங்கள் விரைவாக புதுப்பித்துத் தர நடவடிக்கை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அதிமுக முன்னார் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரத்தில் அளித்த பேட்டியில் உள்ளூரில் தொழில் செய்யும் சிறு குவாரி உரிமையாளர்களை குறிவைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் வெளிமாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு மட்டும் அரசு ஏன் தடுப்பதில்லை என கேள்வி எழுப்பியுள்ளார். கனிமவளம் கடத்தும் பெரிய அளவிலான நிறுவனங்கள் மீது இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சி.வி.சண்முகம் வலியுறுத்தினார்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *