கூடங்குளம் வழக்கில் 18 பேருக்கு சிறைத் தண்டனை.. பரபரப்பான தீர்ப்பு விவரம்.

கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான வழக்கு ஒன்றில் 18 பேருக்கு தலா 7 வருடம் சிறைத் தண்டனை விதித்து வள்ளியூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்து உள்ளது.

கடந்த 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் என்பது இடிந்தகரை என்ற மீனவர் கிராமத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது. அணு உலை எதிர்ப்புக் குழுத் தலைவர் சுப. உதயகுமார் இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தினார்.

அப்போது போராட்டத்தில் பங்கேற்க மறுத்த மீனவர்கள் இரண்டு பேர் அரிவாளால் வெட்டப்பட்டனர் என்பது வழக்காகும். இந்த வழக்கில் 22 பேர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர். வழக்கை விசாரித்த நெல்லை மாவட்டம் வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பர்கத் பேகம் தீர்ப்பளித்து உள்ளர்.

அவர், இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தவர்களில் சுப.உதயகுமார், புஷ்பராயன், மை.பா.ஜேசுராஜ் ஆகிய மூவர் மீதன குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி அவர்களை விடுவிப்பதாக தெரிவித்தார். மற்ற 19 பேரில் ஒருவர் வழக்கு விசாரணை காலத்தில் இறந்து விட்டார். எஞ்சிய 18 பேருக்கு தலா ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உள்ளார். இவர்களில் பெரும்பாலானவர்கள் இடிந்தகரை மீனவ்ர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *