டிசம்பர் -31,
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. ராம் சரணுக்கு இரட்டை வேடம். அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்துள்ளார். பிரதான வில்லன்- எஸ்.ஜே.சூர்யா.
இவர்கள் தவிர, பிரகாஷ்ராஜ், சமுத்திரக்கனி, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர்.
பொங்கலை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் இந்தப்படத்தின் ‘டிரெய்லர்’ நாளை ( 1 -ஆம் தேதி ) வெளியிடப்படுகிறது.தமன் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.
ஷங்கர் படத்தின் பாடல்கள் எப்போதும் ஸ்பெஷலாக இருக்கும். இந்த படத்தில் ரொம்பவும் ‘ஸ்பெஷல்’.5 பாடல்களை படமாக்க ஆன செலவு மட்டும் 75 கோடி ரூபாய்.
‘ஜரகண்டி’ என்ற பாடலுக்கு பிரபுதேவா, ‘டான்ஸ் மாஸ்டர்’. மலைக்கிராமத்தை தத்ரூபாமாக அரங்கம் அமைத்து, இந்த பாடல் படமாக்கப்பட்டது.
‘நா நா ஹைரானா’ எனும் ‘டூயட்’பாடல் நியூசிலாந்தில், விசேஷ காமிராவில் ‘ஷுட்’ செய்யப்பட்டது.’டோப்’என்ற பாடலை 100 ரஷ்ய நடன கலைஞர்களை வைத்து படமாக்கி உள்ளார், ஷங்கர்.
ராம் சரண் அறிமுகப்பாடலான ‘ரா மச்சா மச்சா’ பாடலில் ஆயிரம் ‘டான்சர்கள் ‘ ஆடியுள்ளனர்.
படத்தின் மொத்த பட்ஜெட் –ரூ. 450 கோடி.
இந்த நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ராம் சரணுக்கு 256 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடிகர்களுக்காக வைக்கப்பட்ட கட்-அவுட்களிலேயே இது மிகவும் உயரமானது என்கிறார்கள்,தெலுங்கானா சினிமாத்துறையினர்.
*