கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வனத்துறை அலுவலகப் பெண் பணியாளரின் கழுத்தில் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பைக்கில் வந்த நபர் பறித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்திற்கு உட்பட்ட மானந்த வாடி பகுதியில் உள்ள சாலையில் அதே பகுதியை சேர்ந்த ரோஸ்லின் ஜோசப் என்ற இளம் பெண் ஆனந்தவாடி வனத்துறை அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். பணி முடிந்து வீடு திரும்பும்போது மானந்தவாடி மைசூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து மர்ம நபர் ஒருவர், திடீரென ரோஸ்லின் ஜோசப் கழுத்தில் இருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினார். இந்த கொள்ளைச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அதன்அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருசக்கர வாகனத்தின் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செயின் பறிப்பு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.