கேரளா நர்ஸ் நிமிஷ பிரியாவுக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை, காப்பாற்றும் முயற்சி கை கொடுக்குமா?

டிசம்பர்-31.
கேரளாவைச் சேர்ந்த நிமிஷப் பிரியா என்ற செவிலியருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கி உள்ளது.

பாலக்காட்டைச் சேர்ந்த பிரியா கடந்த, 2011- ஆம் ஆண்டு ஏமன் நாட்டித் தலைநகரமான சானவுக்குச் சென்று அங்கு மருத்துவமனையில் செவிலியராக வேலைக்கு சேர்ந்தவர் ஆவார். அதன் பிறகு கடந்த 2014- ஆம் ஆண்டில் பாலக்காட்டுக்கு நிமிஷாவும் அவருடைய கணவர் மற்றும் மகளும் திரும்பினார்கள். சில மாதங்கள் கழித்து 2015- ஆம் ஆண்டில் ஏமன் சென்றார். அங்கு உள்நாட்டு் போர் மூண்டதால் கணவர் மற்றும் மகளால் பிறகு அங்கு செல்ல முடியவில்லை.

இதே வேளையில் பிரியா ,சனா நகரத்தில் தனியாக மருந்துக் கடை வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஏமன் நாட்டுச் சட்டப்படி வெளிநாட்டவர் ஒருவர் உள்நாட்டவரை பங்குதரராக சேர்த்துக் கொண்டுதான் தொழில் தொடங்க முடியும். இதனால் பிரியாக தனது கணவருக்கும் நன்கு அறிமுகமனா மகதி என்பரை சேர்த்துக் கொண்டார்.
நாளடைவில் பிரியாவின் பாஸ்போர்ட்டையும் திருமண புகைப்படங்களையும் பறித்துக் கொண்ட மகதி அவரை கொடுமையும் செய்து உள்ளார். இது பற்றி பிரியா அளித்த புகாரை ஏற்று மகதி மீது நடவடிக்கை எடுக்காத அந்த நாட்டுப் போலீசாார் பிரியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால் பிரியா ஆறு வாரங்கள் சிறையில் இருந்து விட்டு வெளியில் வர நேரிட்டது.

இதன் பிறகு மகதியிடம் உள்ள பாஸ்போர்ட்டை எடுப்பதற்கு அவருக்கு மயக்க மருந்துதை செலுத்தி உள்ளார். மருந்தின் தாக்கம் அதிகமானதால் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து கைது செய்யப்பட்ட பிரியாவுக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. அவருக்கு இப்போது வயது 36.
அவைர மீட்பதற்கு இந்திய தூதரகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. கேரளாவிலும் தன்னார்வலர்கள் shave nimasha periya என்ற அமைப்பை ஏற்படுத்தி நிதி திரட்டி மகதி குடும்பத்திற்கு கொடுத்து பிரியாவை மரண தண்டனையில் இருந்து மீட்டு விடுவதற்கு நடவடிக்கை எடுத்தனர். எதுவும் பயன் கொடுக்காத நிலையில் பிரியாவின் மரணதண்டனையை நிறைவேற்றுதற்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி கையெழுத்திட்டு உள்ளார். இந்த தண்டனை இன்னும் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்பட இருக்கிறது.

இது பற்றி இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டு உள்ள அறிக்கையில், பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு இருப்பதை அறிந்திருப்பதாகவும் அவரது குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.


இதற்கு முன்னதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிரியாவின் தாயர் பிரேமா குமரி ஏமன் நாட்டுக்குச் சென்று மகளை சந்தித்துப் பேசினார். கொல்லப்பட்ட மகதி குடும்பத்தினரையும் சந்தித்து பேச்சு வார்த்தையும் நடத்தினார்.
இப்போது பிரியாவை மரணத்திலிருந்து காப்பாற்றுவதற்காக கடைசி கட்ட நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.

முயற்சி பயன் கொடுத்து பிரியா காப்பாற்றுப் படுவரா?
*

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *