ஏப்ரல்.26
ஈரோடு,கோவை உள்ளிட்ட கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிக அளவு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோடை காலம் தொடங்கும் முன்பே தமிழகத்தில் வெயில் வாட்டியெடுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக பரவலாக மழையும் பெய்தது. இதனிடையே, நேற்று ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலப் பகுதி மாவட்டங்களில் அதிகபட்சமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு மாவட்டத்தில், அதிகபட்சமாக 38.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கோவை மாவட்டத்தில் அதிபட்சமாக 36.0 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 25.4 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 22.3 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 15.2 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 24.5 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. இதேபோல், கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகபட்சமாக 27.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், குறைந்தபட்சமாக 16.0 டிகிரி செல்சியஸ் வெப்பமும், சராசரியாக 28.1 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு, கோவை உள்ளிட்ட கொங்குமண்டலப் பகுதிகளில் நேற்று காலை முதல் பரவலாக மழை பெய்தபோதும், அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.