கொரோனா நோய் என்பது சீனா நடத்திய உயிர் தாக்குதல் (biological attack) என்று அந்த நாட்டின் வூகான் மாகாணத்தை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர் கூறியுள்ளது உலகம் முழுவதும் விவாதப் பொருளாகி இருக்கிறது.
கடந்த 2019- ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்த புறப்பட்ட கொரானா பெருந்தொற்று உலகத்தை மூன்று ஆண்டுகள் முடக்கிப் போட்டிருந்தது யாராலும் மறந்துவிடக் கூயடிது அல்ல. பல லட்சம் பேர் உயிரிழந்தனர். பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. படிப்பு,பயணம் என்று இந்த கோவிட் 19 -ஆல் ஏற்படாத பிரச்சினைகளே இல்லை.
கோவிட் சீனாவின் ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் பரப்பப்பட்டதாக தொடர்ந்து செய்திகள் வெளியானது. சீனாவும் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தது.
இப்போது வூகான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த சாவோ ஷாவோ என்ற ஆராய்ச்சியாளர், சர்வதேச செய்தியாளர் சங்க உறுப்பினர் ஜெனிஃபர் என்பவருக்கு பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார்.
“கொரோனா வைரஸ், சீனா திட்டமிட்டு உருவாக்கிய ‘உயிரி ஆயுதம்’ . 2019-ம் ஆண்டில் கொரோனா பரவத் தொடங்குவதற்கு முன்பு சீனாவின் முக்கிய அதிகாரி ஒருவர் கொரோனா வைரசின் 4 மாதிரிகளை ஆய்வாளர்களிடம் கொடுத்து, அதில் எது எளிதாக பரவுக் கூடியது என கண்டறியச் சொன்னார். அவர்கள் நான்கையும் ஆராய்ந்து அதில் அனைத்து உயிரினங்களுக்கும் எளிதாகப் பரவக்கூடியது என்று ஒன்றை கண்டுபிடித்துக் கொடுத்தனர். அது தான் பின்னர் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
2019-ல் சீனாவில் நடைபெற்ற ராணுவ விளையாட்டு போட்டியில் பங்கேற்க வந்த பல்வேறு நாடுகளின் வீரர்களின் உடல்நிலையை பரிசோதிக்க சாதாரண மருத்துவர்களை அனுப்பாமல் வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் அனுப்பப்பட்டனர். வீரர்களுக்கு கொரோனா வைரசை பரப்பவே அவர்கள் அனுப்பப்பட்டிருக்கலாம்” இவ்வாறு சாவோ ஷாவோ தெரிவித்துள்ளார்.
சீன ஆராய்ச்சியாளரின் பேட்டி உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு சீனா என்ன பதில் சொல்லப் போகிறதோ?
000