May 29, 2023
அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா பெயரில் உள்ள வீடு பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது, இந்த வீட்டை தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில், வருமானவரித்துறை அதிகாரிகள் 4 நாட்களாக அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டான் கோவில் கீழ்பாகம் செந்தில் பாலாஜி அவருடைய தம்பி அசோக் மனைவியின் நிர்மலா பெயரில் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கரூர் சேலம் சாலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமாருக்கு சொந்தமான வீடு கட்டுமானப்பணி ஆண்டான் கோவில் கீழ்பாகம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி அவருடைய தம்பி அசோக் மனைவியின் நிர்மலா பெயரில் புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது.
இதை வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று மாலை மூன்று கார்களில் சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வட மாநிலத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களை ஓரமாக நிற்க வைத்து விட்டு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை போலீசார் துணையோடு சோதனையில் ஈடுபட்டனர், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மிகப்பெரிய அளவில் பிரமாண்டமான பங்களா கட்டுமான பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்த வழக்கில் திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு திமுகவினருக்கு இடையே அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கரூரில் கடந்த 26 ஆம் தேதி சோதனை நடத்த வந்த வருமான வரித்துறையினரிடம் அடையாள அட்டை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திமுகவினர் அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்தனர். இது சம்பந்தமாக நேற்று பதியப்பட்ட வழக்கில், இன்று ஒரே நாளில் 15 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திமுக கவுன்சிலர்கள் 20வது வார்டு லாரன்ஸ், 16வது வார்டு பூபதி முன்னாள் கவுன்சிலர் ஜோதிபாசு உள்ளிட்ட 9 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க கரூர் போலீசார் அழைத்துச் சென்றனர். அதே போன்று, ராயனூரில் உள்ள கொங்கு மெஸ் உணவக உரிமையாளர் சுப்பிரமணி வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் அதிகாரிகள் ஈடுபட்ட போது தகராறில் ஈடுபட்ட செல்வம் என்பவரை தாந்தோன்றிமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைக்க அழைத்துச் சென்றனர். 10 பேரை கைது செய்து அழைத்துச் சென்ற போலீசார் மீதமுள்ள நபர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கரூரில் ஆளும் கட்சி கவுன்சிலர்களே கைது செய்யப்பட்ட சம்பவம் திமுக நிர்வாகிகளுக்கு இடையே அச்சத்தையும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.