தமிழ் சினிமாவில்,சர்ச்சையின் மொத்த உருவமாக திகழ்பவர் காமெடி நடிகர் வடிவேலு.
சக தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நடிகர் –நடிகைகள் என இவர் சண்டை போடாத ஆளே இல்லை.
பகிரங்கமாக முதல் மோதலை விஜயகாந்துடன் ஆரம்பித்தார், ‘வைகைப்புயல்’ இருவர் வீடுகளும் சென்னை சாலிகிராமத்தில் அருகருகே உள்ளன. விஜயகாந்த் ஆஸ்பத்திரிக் எதிரேதான்,வடிவேலு ஆபீஸ் இருக்கிறது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டசபை தேர்தலில் விஜயகாந்தை வசை மாறி பொழிந்தார் ,வடிவேலு, தேர்தல் முடிந்ததும் அவரது ஆபீஸ் கல்வீசி தாக்கப்பட்டது.
வடிவேலுவை நாயகனாக அறிமுகம் செய்த ஷங்கருடன் தகராறு. இதனால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் ‘ அண்மையில்தான் மீண்டும் நடிக்க அனுமதிக்கப்பட்டார். இடைப்பட்ட காலத்தில் சிங்கமுத்து உள்ளிட்ட தோழர்களோடு‘ மோதல்.
இப்போது சொந்த கிராமத்திலேயே பஞ்சாயத்து. ராமநாதபுரம் மாவட்டம் காட்டு பரமக்குடியில் அய்யனார் கோயில் உள்ளது. அய்யனார் ,இவரது குல தெய்வம். அங்கே அடிக்கடி சென்று வருவார்.
ஆனாலும் இந்த கோயில் கிராமத்துக்கு பாத்தியப்பட்டது. அந்த கோயிலுக்கு தனக்கு வேண்டியவர் ஒருவரை
அறங்காவலராக நியமித்து, அய்யனார் கோயில கபளிகரம் செய்ய வடிவேலு முயல்வதாக ஊர் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கோயில் முன்பு, வடிவேலுவை கண்டித்து போராட்டமும்நடத்தினர். ஊர் கோயிலை கையகப்படுத்த நினைக்கும் வடிவேலு மீது விரைவில் போலீசில் புகார் அளிக்கவும் கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.
மக்களை சிரிக்க வைக்கும் வடிவேலு , மற்றவர்களிடம் தன்னுடைய கோர முகத்தைக் காட்வது நியாயமா ?
–