மே.1
கேரளா மாநிலம் திருச்சூரில் உலக பிரசித்திபெற்ற பூரம் திருவிழா நேற்று மாலை கோலாகலமாகத் தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்.
கேரள மாநிலம் திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் வருடம்தோறும் நடத்தப்படும் பூரம் திருவிழா உலக பிரசித்தி பெற்றது. 200 ஆண்டு பழமை வாய்ந்த இந்த திருவிழாவில், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட யானைகளின் ஊர்வலம் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலில் இருந்து தொடங்கி, திருவம்பாடி பகவதி அம்மன் கோவிலில் முடிகிறது.
சுமார் 36 மணி நேரங்களுக்கு மேலாக நீடிக்கும் இந்த திருவிழாவில் 50க்கும் மேற்பட்ட யானைகள், மேளங்களின் மாயாஜால வித்தைகளான பஞ்ச வாத்தியம் , தொடர்ந்து ஒலிக்கும் பஞ்சவாத்தியம் மற்றும் நிகழ்ச்சியின் முடிவில் 6 – மணி நேரத்திற்கு மேலாக வெடிக்கும் வான வேடிக்கை என கேரளாவில் கொண்டாடப்படும் பிரம்மாண்டமான திருவிழாவின் சிகர நிகழ்வான பூரங்களின் பூரம் என அழைக்கப்படும் திரிசூர் பூரம் இன்று நடைபெறுகிறது.
அதன்படி இன்று மாலை 3 மணிக்கு நட்சத்திர நிகழ்ச்சியான ‘வெடிக்கெட்டு’ அல்லது வாணவேடிக்கை நடைபெறும். ‘பகல் பூரம்’ அல்லது ‘பகல் பூரம்’ காலை 8 மணிக்குத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு ‘உபச்சாரம் சொல்லல்’ நிறைவு விழா நடைபெறுகிறது. நள்ளிரவு 12.45 மணிக்கு ‘பகல் வெடிக்கட்டு’ வாணவேடிக்கை நடக்கிறது.இந்த திருவிழாவில், கேரள மக்கள் மட்டுமின்றி, இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட சுமார் 20 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். உலகப் புகழ்பெற்ற இந்த பிரம்மாண்ட பூரம் விழா வான வேடிக்கை நிகழ்ச்சியுடன் இன்று மாலை 5.51 மணிக்கு நிறைவடைகிறது.