ஏப்ரல்.25
கைத்தறி நெசவாளர்கள் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நெசவாளர்களுக்கு வீடு கட்டுவதற்காக தலா 4 லட்சம் வீதம் 26 நெசவாளர்களுக்கு 1.04 கோடி மதிப்பிலான பணி ஆணைகளை, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
அப்போது, செய்தியாளர்களை சந்தித்த கைத்தறிவு உதவி இயக்குனர் சிவகுமார், சிறுமுகை பகுதியில் கைத்தறி பூங்கா அமைப்பதற்கு அமைச்சர் உறுதி கூறி உள்ளதாகவும், முதற்கட்ட பணிகள் இந்த வருடத்தில் துவங்க கூடும் எனவும் தெரிவித்தார். மேலும், நீலகிரி பகுதியில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தோடர் இன மக்களுக்காக கூட்டுறவு சங்கம் அமைக்க மாநில கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அதனையும் கூடிய விரைவில் அமைச்சர் திறந்து வைப்பார் என்றும் அவர் அப்போது கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார், கைத்தறி உதவி இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.