கோவையில் பிஎஸ்-2 படத்தின் புரமோஷன் விழா – திரிஷாவிடம் “லியோ” பட அப்டேட் கேட்ட ரசிகர்கள்

ஏப்ரல். 17

கோவையில் பொன்னியின் செல்வன் 2ம் பாக விளம்பர நிகழ்ச்சியில் பங்கேற்ற திரிஷாவிடம் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் அப்டேட் குறித்து ரசிர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள பிரோஜோன் மாலில் பொன்னியின் செல்வன்-2 விளம்பர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அந்தப்படத்தில் நடித்துள்ள நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, மற்றும் நடிகைகள் திரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகை திரிஷா, நான் கோவைக்கு வந்து பல வருடங்கள் ஆகிறது. நீண்ட நாட்கள் கழித்து தற்போது கோவைக்கு வந்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.

அப்போது, திரிஷாவிடம் விஜய் நடித்து வரும் LEO படத்தின் அப்டேட் குறித்து ரசிகர் கேட்டு LEO, LEO என சத்தமிட்டனர். அதற்கு திரிஷா, நான் தற்போது LEO பட சூட்டிங்கில் இருந்துதான் வருகிறேன். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் உங்கள் தளபதி எல்லாரும் நல்ல இருக்காங்க.. மற்றதை LEO பட நிகழ்ச்சியில் பேசிக் கொள்வோம் என்றார்.

ட்விட்டரில் இருந்து எடுக்கப்பட்ட கேள்விகள் சில திரிஷாவிடம் கேட்கப்பட்டது. அதன்படி, திரிஷாவிடம் குந்தவைக்கு சுயம்வரம் எப்போது? சுயம்வரத்திற்கு நாங்கள் வரலாமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, என் உயிர் அவர்களுடையது என ரசிகர்களை கை காண்பித்தார். பிறகு அருண்மொழி வர்மன், வந்தியதேவன், ஆதித்த கரிகாலனை 1,2,3 என மனத்தில் உள்ளதைபோல் வரிசைப்படுத்த வேண்டும் என கேட்கப்பட்டதற்கு, PS2 புரோமோசன் என்பதால், என் இதயத்தில் இருப்பது இப்போதைக்கு VT(வந்தியதேவன்)தான் என திரிஷா பதிலளித்தார். இதேபோல், நடிகர்கள் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர்களிடையே பேசி, அவர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தனர்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *