கோவை அருகே காட்டில் பிடித்த தீயை அனைக்கும் பணியில் ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளது.
கோவை மாவட்டம் நாதேகவுண்டன் புதூரை ஓட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகின்றது. காட்டுத் தீயை அணைக்க கூடிய பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சனிக்கிழமை பகல் பொழுதில் காட்டுத்தீ பெரும்பாலான இடங்களில் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இரவு நேரத்தில் மீண்டும் வேகமாக பரவியது. கடந்த ஒரு வாரத்தில் 100 ஏக்கருக்கும் அதிகமான வன பரப்பளவு தீயில் எரிந்து நாசமாகி விட்டது. இதையடுத்து ஞாயிறு காலை ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தொடங்கி இருக்கிறது.இதற்கான ஹெலிகாப்டர் சூலூர் விமான படைத்தளத்தில் இருந்து வரவழைக்கப்பட்டு உள்ளது. தீயை அணைப்பு பணிகளில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர். தீ அணைப்புப் பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு விரைவுபடுத்தி உள்ளார். யானை, காட்டெருமை, மான், காட்டு பன்றி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளும், மூலிகை மரங்களும் இருப்பதனால் தீயை விரைவாக அணைக்குமாறு உயிரியல் ஆர்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து இருக்கின்றனர்.
2023-04-16