உலக அளவில் சினிமா துறையில் வழங்கப்படும் உயரிய விருது ஆஸ்கர்.
ஆண்டுதோறும் சிறந்த படம், நடிகர், நடிகை, இயக்குநர்,சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது
சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுவது இல்லை.
2028 – ஆம் ஆண்டு முதல் சண்டைப் பயிற்சிக்கும் ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அகாடமி அறிவித்துள்ளது.
2027-ல் வெளியான படங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்ட படத்துக்கு சிறந்த சண்டைப் பயிற்சிக்கான முதல் ஆஸ்கர் விருது வழங்கப்படும் .
2028-ல் நடைபெறவுள்ளது 100-வது ஆஸ்கர் விருது விழா என்பது குறிப்பிடத்தக்கது.
—