சந்திரமுகி 2 தள்ளிப்போகும் ரகசியம்.

செப்டம்பர்,09-

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி திரைப்படம் பெரும் சாதனை படைத்தது. இதன் இரண்டாம் பாகம் வாசு டைரக்‌ஷனில் உருவாகியுள்ளது.

இந்தப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வடிவேலு, ராதிகா உள்ளிட்டோரும் உள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.

சந்திரமுகி  திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வரும் 15-ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் ரிலீஸ் தேதியை பட நிறுவனம் தள்ளிவைத்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சந்திரமுகி  திரைப்படத்தின் வெளியீட்டை செப்டம்பர் 28-ஆம் தேதிக்கு மாற்றி வைத்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

ஆனால் ,நிஜம் அதுவல்ல. ஜவான் படம் எல்லா ஏரியாக்களில் பிச்சு உதுறுவதால், சந்திரமுகிக்கு தியேட்டர் கிடைக்கவில்லை. எனவே ரிலீஸ் தள்ளிப்போகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ஜவான் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் ’ஜவான்’ உலகம் முழுவதும் ஒரே நாளில் 129 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *