சர்ச்சை, ஜோதிகாவை குறிவைத்து சிம்ரன் பேசினாரா?

பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ படத்தில் வில்லியாக நடித்து கலக்கி இருந்தார்,சிம்ரன்.இதற்காக அவருக்கு சமீபத்தில் விருது
வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிம்ரன் பேசியதாவது:

“என்னுடைய சக நடிகை ஒருவருக்கு சமீபத்தில் மெசேஜ் செய்திருந்தேன்.இப்படி ஒரு கதாபாத்திரத்தில் உங்களை பார்ப்பதில் ஆச்சர்யமாக இருக்கிறதுஎன்று கூறியிருந்தேன். உடனடியாக அவரிடம் இருந்து எனக்கு ரிப்ளை வந்தது.

“ஆன்ட்டி’கதாபாத்திரங்களில் நடிப்பதை விடஇது பரவாயில்லை என்று கூறியிருந்தார். அப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை நான் அவரிடமிருந்து எதிர்பார்க்கவில்லை

நான் என்னுடைய கருத்தை சொல்லியிருந்தேன். அவரிடமிருந்து
நல்ல பதில் எனக்குகிடைத்திருக்க வேண்டும்..ஆன்ட்டி ரோல்களில் நடிப்பது, 25 வயது பிள்ளைக்கு அம்மாவாக நடிப்பது ஒன்றும் தவறில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பே‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் நான் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ‘டப்பா ‘கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு இது மேல். ” என்றுசிம்ரன் கோபம் கொப்பளிக்க தெரிவித்தார்.

இதனையடுத்து சிம்ரன் குறிப்பிடும் ‘டப்பா’ நடிகை யார் என்பது குறித்து எக்ஸ் தளத்தில் வினாக்கள் எழுந்தன.விவாதங்களும் நடந்து வருகிறது.

பலரும் அந்த நடிகை ஜோதிகா என அடித்து
சொல்கிறார்கள்.ஏன் ?

ஜோதிகா சமீபத்தில் இந்தியில் ‘டப்பா கார்டெல்’ என்னும் வெப் தொடரில்நடித்திருந்தார். அது தொடர்பான பேட்டி
ஒன்றில் தென்னிந்திய சினிமா துறையை விமர்சித்திருந்தார்.
இதனை வைத்து சிம்ரன் சொல்லும் ‘டப்பா’,
நடிகை ஜோதிகாதான் என்று
பலரும் கூறி வருகின்றனர்

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *