சர்வதேச பட்டியல் – மாஸ் செய்த அண்ணா பல்கலை…… இந்த தடவ 427!

ஜூன்- 28

சிறப்பான செயல்பாடுகள் காரணமாக அண்ணா பல்கலைக்கழகம் சர்வதேச அளவிலான தர வரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் கூட தர வரிசையில் சறுக்கி இருக்கும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் பெரிதும் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு பெர்ஃபாமன்ஸை தெறிக்கவிட்டிருக்கிறது. . இங்கு தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்தும் மாணவர்கள் வந்து படித்து விட்டு செல்கின்றனர். குறிப்பாக பின் தங்கிய நாடுகள், சிறிய தீவுகள் ஆகியவற்றில் இருந்து வரும் மாணவர்களுக்கு கட்டணச் சலுகைகள் வழங்கி வரவேற்கிறது.

மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த பல்கலைக்கழகம் சர்வதேச அளவில் கவனம் ஈர்க்கும் வகையில் ஒரு விஷயத்தை செய்துள்ளது. அதாவது, QS World Ranking 2024 பட்டியலில் டாப் 500 இடத்திற்குள் வந்திருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகம் பிடித்திருக்கும் இடம் 427. கடந்த ஆண்டு 551 – 560க்கு இடைப்பட்ட தரவரிசையில் இருந்தது. நடப்பாண்டு பெற்றுள்ள முன்னேற்றத்திற்கு சிறப்பான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் எடுத்ததே காரணம் என்கின்றனர்.

பாடத்திட்டம், படிப்புகள் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினர். பேராசிரியர்கள் திறம்பட செயல்படும் வகையில் ஏற்பாடு செய்தது கவனிக்கத்தக்கது. குறிப்பாக பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் (CpF) தொடர்பான மதிப்பெண்ணில் 99.8ஐ பெற்று அசத்தியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டில் 85.2ஆக இருந்தது.

சறுக்கிய ஐஐடி மெட்ராஸ்

அதேசமயம் 7 ஐஐடிகள், ஐஐஎஸ்சி, டெல்லி பல்கலைக்கழகம் ஆகியவை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு முன்பாக தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஐஐடி மெட்ராஸை பொறுத்தவரை 250ல் இருந்து 285வது இடத்திற்கு சறுக்கியுள்ளது. சென்னை பல்கலைக்கழகம் 547ல் இருந்து 20 இடங்கள் முன்னேறி 527ஐ அடைந்துள்ளது. என்.ஐ.டி திருச்சி 801-1000 தர வரிசை பட்டியலில் இருந்து 781 – 790 பட்டியலுக்கு உயர்ந்துள்ளது. விஐடி பல்கலைக்கழகம் 1001-1200ல் இருந்து 851-900 தர வரிசை பட்டியலுக்கு முன்னேற்ற கண்டுள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *