சாதி மாணவர்களுக்கு மட்டும் அதிக மதிப்பெண், கல்லூரி பேராசிரியர் அட்டூழியம்!

ஆகஸ்டு, 30 –

ஜாதிக்கட்சிகள் விதையூன்றி,முளையிட்டு, பூப்பூத்து,மரமாகிப்போன தமிழகத்தில் ஜாதிய மோதல்களுக்குகுறைச்சல் இல்லை.’இது நல்லதல்ல’ என போதிக்க கடமை பட்ட ஆசிரியர்களே, இந்த மரங்களுக்கு உரம் போட்டு வளர்க்கிறார்கள் என்பது அதிர வைக்கும் செய்தி.

இதனை ஒடுக்க தமிழக அரசு இப்போது மும்முரமாக களத்தில் இறங்கியுள்ளது. ஜாதி மோதல்களை தூண்டி விட்டு ’அழகு’பார்த்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு தமிழக அரசாங்கம் தண்டனை கொடுத்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட ஒருவர் பெயர் ரவி

மசியன்.சென்னை வியாசர்பாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர். இன்னொருவர் சிவகங்கை அரசு கல்லூரி பேராசிரியர்,

கிருஷ்ணன்.மூன்றாவது நபர் , கும்பகோணம் அரசு கல்லூரி பேராசிரியர் சரவணபெருமாள்.

தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது ஒரு வகை தண்டனை. இவர்கள் மூன்று பேரையும் மலை ஏற வைத்துள்ளது, கல்லூரி கல்விக்கான இயக்குநரகம். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கூடலூருக்கு மூன்று பேரும் மாற்றப்பட்டுள்ளனர்.

என்ன செய்தார்கள் இந்த ஆட்கள்?

இவர்களில் ஒருவர், தனது சொந்த ஜாதிக்காரர்களிடம் மட்டுமே பாசமாக இருப்பார். அண்மையில் நடந்த தேர்வில் பிற ஜாதி மாணவர்கள் சிலருக்கு ஒரே ஒரு மார்க் மட்டும் போட்டு பெயில் ஆக்கி விட்டார். இன்னொருவர் ரொம்ப டேஞ்சர் ரகம். தனது ஜாதி பெயரில் வாட்ஸ் குரூப் ஆரம்பித்து, தனது ஜாதி மாணவர்களை அதில் சேர்த்துள்ளார். அவரது ஜாதிப்பெருமைகள் அந்த வாட்ஸ் அப்பில் இருக்கும். அவரது ஜாதித்தலைவரின் படமும் முகப்பில் இடம் பெற்றுள்ளது. கல்லூரியில் ஜாதி

மோதல்களுக்கு , அவரது பதிவுகள் இடம் அளித்தது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் புகார் அளித்ததால், கல்லூரி முதல்வர்கள், தமிழக அரசுக்கு தகவல் சொன்னார்கள். இதனை தொடர்ந்தே அவர்கள் மீது நடவடிக்கை

பாய்ந்துள்ளது.

இடைச்செருகலாக இன்னொரு செய்தியும் உண்டு.அரசாங்க கல்லூரியில் வேலை பார்க்கும் ஒரு பேராசிரியர், ஜாதி மோதல்களை மாணவர்களிடம் தூண்டி விட்டதால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரை அரசாங்கம் பணி இடை நீக்கம் செய்துள்ளது.அவரது பெயர், வேலை பார்க்கும் கல்லூரி

விவரம் அரசால் தெரிவிக்கப்படவில்லை.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *