-ஆகஸ்டு, 15-
நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பிளஸ்–2 மாணவர் சின்னத்துரையும், அவரதுதங்கை சந்திரா செல்வியும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த கொடுர தாக்குதலில் ஈடுபட்டதாக பிளஸ்–2 மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
தாக்குதலுக்கு ஆளான இருவரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள்.சாதிய வன்மத்தால் நிகழ்ந்த இந்த குரூர சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரை உலக பிரபலங்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்துவும் நாங்குநேரி சம்பவத்திற்கு, தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
“நாங்குநேரி சம்பவம் நாட்டின் இதயத்தில் விழுந்த வெட்டு .சாதியைக்கூட மன்னிக்கலாம் .அதற்கு இழிவு பெருமை கற்பித்தவனை மன்னிக்க முடியாது .சமூக நலம் பேணும் சமூகத் தலைவர்களே! முன்னவர் பட்ட பாடுகளைப் பின்னவர்க்குச் சொல்லிக் கொடுங்கள். அல்லது மதம் மாறுவதுபோல் சாதி மாறும் உரிமையைச் சட்டமாக்குங்கள்” என சமூக வலைத்தளத்தில் வைரமுத்து தனது கொதிப்பை பதிவிட்டுள்ளார்