பிரபல இந்திப்பட இயக்குனர் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ என்ற படத்தின் மூலம் ,நம்ம ஊர் தனுஷ், இந்தியில் அறிமுகம் ஆனார். மீண்டும் அவரது இயக்கத்தில் ‘அட்ராங்கி ரே’ என்ற படத்தில் நடித்தார். 3-வது முறையாகவும் இந்த கூட்டணி இணைகிறது.
ஆனந்த் ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும், இந்த புதிய படத்தின் பெயர் -, ‘தேரே இஷ்க் மெய்ன்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். தனுஷ் ஜோடியாக நடிக்க கிரித்தி சனோன் ஒப்பந்தம் செய்யப்பட்டுளார்.
அண்மையில் படத்தின் டீசர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாலையில் திடீரென வன்முறை வெடிக்கிறது .அப்போது, அங்கு வருகிறார் கிரித்தி சனோன் , தனது கையில் பெட்ரோல் கேன் வைத்திருக்கிறார். அதை தலையில் ஊற்றி, வாயில் சிகரெட்டை வைத்து லைட்டரை ஆன் செய்வது போன்ற காட்சி ,இந்த டீசரில் இடம் பெற்றுள்ளது.
அவர் சிகரெட் புகைக்கும் காட்சிக்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது பற்றி கிரித்தி சனோன் கொஞ்சமும் கவலைப்படவில்லை.’சிகரெட் புகைக்கும் காட்சியில் நடித்துள்ளீர்களே ? என அவரிடம் கேட்கப்பட்டது.
‘நடிகைகள் மது குடிக்கும் காட்சிகளே படமாகிறது. சிகரெட் குடிச்சா தப்பா?’ என பதில் வினா எழுப்பினார், சனோன்.
யார் இந்த கிரித்தி சனோன் ?
டெல்லியில் பிறந்த கிரித்தி சனோன், ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்தார். பின்னர் டிவிக்கு வந்தார்.
‘நெநோக்கடனினே’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார், கிரித்தி சனோன். ‘ஹீரோபன்தி’ என்ற இந்தி படம் மூலம் , ‘பாலிவுட்’ டுக்கும் சென்றார். இந்த படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது.
ராமாயண காவியத்தை தழுவி ‘ஆதிபுருஷ்’ என்ற தெலுங்கு படம் எடுக்கப்பட்டது. பிரபாஸ் ,ராமனாக நடித்த இந்த படத்தில் சனோன் ,சீதையாக நடித்திருந்தார்.
அந்த சினிமா சீதைதான் ‘சிகரெட் குடிச்சது தப்பா ? என கேட்கிறார்.
—