2001 ஆம் ஆண்டு அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர், சோனா.
பத்து பத்து என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த அவர், வில்லி,காமெடி என அனைத்து கேரக்டர்களிலும் முத்திரை பதித்தவர்.
‘ஸ்மோக்’ என்ற பெயரில் வெப் தொடர் தயாரித்து வருகிறார்.இது அவரது வாழ்க்கை வரலாற்று தொடர். 8 எபிசோடுகள்.
தனது வாழ்க்கையில் நடந்த இனிப்பான, கசப்பான
அனுபவங்களை படமாக்கியுள்ளார்.
தனக்கு புகைப்பழக்கம் ஏற்பட்டது எப்படி என்பது குறித்தும் அதில் சொல்லி இருக்கிறார்.
இது குறித்து சோனாவின் பேட்டி:
பிரேம்ஜியை வைத்து நான் ‘பாக்யராஜ்; என்ற படத்தை தயாரித்தேன்.அவருக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கேரவனில் இருந்து சத்தம் வந்தது.அப்போது பிரேம்ஜியும், நானும் கேரவன் அருகில் அமர்ந்திருந்தோம்.
இருவரும் கேரவன் கர்ட்டனை திறந்து பார்த்தப்போது
அதிர்ந்தோம். துணை நடிகை ஒருவருடன், மானேஜர் பேரம்
பேசிக்கொண்டிருந்தார்.‘அட்ஜஸ்ட் செய்தால் டபுள் சம்பளம் தருவதாக அவர்சொல்ல, அந்த நடிகை அதற்கு ஒப்புக்கொள்ளாமல் சத்தம் போட்டுள்ளார்.
கோபத்தில் மானேஜர் கன்னத்தில் அறை விட்டேன்.
எனக்கு ஒரே ‘டென்ஷன். அப்போது, பிரேம்ஜி
சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். டென்ஷனில், அதை வாங்கி நானும் குடித்தேன்அப்போது முதல் டென்ஷன் வரும்போதெல்லாம்
சிகரெட் குடிப்பது வழக்கமாகி விட்டது.
ஆனால் இப்போது நான் புகைப்பிடிப்பது இல்லை.
பெரும் முயற்சி செய்து சிகரெட் பழக்கத்தை நிறுத்தி
விட்டேன்’ என்றார், நடிகை சோனா.
–