சித்தா பல்கலை.மசோதா நிறுத்தி வைப்பு – யுஜிசி விதிகளுக்கு எதிராக இருப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம்

மே.4

தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய சித்தா பல்கலைக்கழக மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

தனியார் நாளிதழ் ஒன்றிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்தார். பல்லைக்கழகங்கள் தொடர்பான 8 மசோதாக்களை தடுத்து நிறுத்தியதற்குக் காரணம், கல்வி என்பது ஒரு பொதுவான விஷயமாக இருக்கிறது என்றா. தொடர்ந்து பேசிய அவர், 1956-ஆம் ஆண்டின் பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு (யுஜிசி) ஒரு வரையறை உள்ளது. அதனுடன் எந்த மாநில விதிகளும் ஒத்துப்போக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பலமுறை கூறியுள்ளது. யுஜிசி சட்டம் மற்றும் ஒழுங்குமுறைகள் உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி மற்றும் அரசியல் தலையீட்டிலிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று கட்டளையிடுகின்றன. அதுதான் நிலை.

துரதிஷ்டவசமாக தமிழகத்தில் நமது மாநிலப் பல்கலைக் கழகங்கள் அரசுத் துறையாக இயங்கி வருகின்றன. மாநிலச் செயலகத்தில் சிண்டிகேட் கூட்டம் நடைபெறுகிறது. சுயாட்சி கிட்டத்தட்ட முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர்களை நியமிப்பதுதான் ஒரே ஒரு நல்ல விஷயம். குறைந்தபட்சம் துணைவேந்தர்கள் சரியான நபர்களாக இருக்க வேண்டும். மேலும், அது வேந்தரின் பொறுப்பாக இருக்கவேண்டும். அதுவும் மாநில முதலமைச்சரிடம் சென்றால் அது முழுக்க முழுக்க அரசியல் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும். இது சாத்தியமில்லை.” என்றார்.

சித்த பல்கலைக்கழக மசோதாவின் நிலை குறித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ சித்தா பல்கலைக்கழக மசோதா தாக்கல் செய்யப்படும்போது, அது யுஜிசி சட்டம் மற்றும் விதிகளுக்குள் இருக்க வேண்டும் என்ற விதிமுறைகளுடன், நான் அதை ஒப்புக்கொண்டேன். பல்கலைக்கழக மானிய குழு விதிகளுக்கு எதிராக சித்தா பல்கலைக்கழக மசோதா உள்ளது. இரண்டு முறையும் பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சர் இருப்பார் என்று மாநில பட்டியலில் வருகிறது. இதற்கு நான் சாத்தியமில்லை என்று தெரிவித்தேன். இதனால் மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *