ஜனவரி-23.
திரைப்படங்கள் வெளியான முதல் நாள் இத்தனைக் கோடி ரூபாய் , இரண்டாவது நாள் இத்தனை கோடி ரூபாய் வசூல் என்று சொல்வது எல்லாம் உண்மை இல்லை என்று பிரபல தயாரிப்பாளர் அளித்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நம்ம இளைய தளபதி விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு என்ற தயாரிப்பாளர்தான் இந்த வாக்கு மூலத்தை கொடுத்து இருக்கிறார்.
நம்ம ஷங்கர் இயக்கத்தில் இவர் தாயரித்த கேம் ஜேஞ்சர் திரைப்படம் பல மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படம் முதல் நாள் உலகம் முழுவதும் 180 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழு வெளியிட்ட தகவல் பெரும வியப்பை எற்படுத்தியது.
இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஐதராபாத் உட்பட பல இடங்களில் உள்ள தில் ராஜுவின் வீ்டு மற்றும் அலுவலகங்களில் கடந்த வாரம் தொகைக்கு கணக்கு காட்டச் சொன்னார்கள்.
“ஐயா, விஜயை வைத்து நான் தயாரித்த வாரிசு படம் மொத்தமே ரூ 120 கோடிதான் வசூலித்தது. அவருக்கு சம்பளமாக ரூ 40 கோடி கொடுத்தேன். வெளி உலகத்தில் சொன்னது போன்று ரூ 300 கோடி வசூலிக்கவில்லை. இப்போது ஷங்கர் இயக்கத்தல் நான் தயாரித்து வெளியிட்ட கேம் ஜேஞ்சர் படமும் வசூல் சுமார்தான். எல்லாமே விளம்பரத்திற்காக அவிழ்த்து விட்ட கதை “ என்று கதறி இருக்கிறார் தில் ராஜு.
இதற்கு முன்னதாக புஷ்பா-2 படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் சுகுமாரின் ஐதராபாத் அலுவலகத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அந்தப் படம் இரண்டாயிரம் கோடி வசூலித்ததாக சொன்னது அனைத்தும் விளம்பரத்திற்காக என்று அவரும் புலம்பியதாக தகவல்கள் தெலுங்கு ஊடகங்களில் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.
அப்படியானால் முதல் நாள் வசூல் இத்தனை் கோடி , இரண்டாவது நாள் வசூல் அத்தனைக் கோடி என்று கோடம்பாக்கத்து ஆட்கள் சொல்வது எல்லாம் பொயயா?
அதிக வசூல் என்று பீற்றிக் கொண்டால் வருமான வரித்துறை அதிகாரிகள் கதவைத் தட்டுவார்கள் என்ற பயம் பரவியிருப்பது என்னவோ உண்மை.
பொய்யைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.
*
,
.