தமிழ்நாட்டு மக்களின் சமையல் பொருட்களில் முன்பெல்லாம் அரிசிக்குதான் அதிகம் செலவிட வேண்டியிருக்கும். அந்த நிலை கடந்த சில நாட்களாக மாறி காயகறிகளுக்கு அதிக செலவு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.
கடந்த ஒரு மாதமாகவே தக்காளி விலை உச்சத்தில்தான் உள்ளது. விலை குறைவதாக செய்திகள் வெளியானலும் கூட தெரு முனை கடைகளில் கிலோ ரூ 140 என்ற விலை பெரும்பாலான இடங்களில் குறையவில்லை. இந்த சூழலில் சின்ன வெங்காயத்தின் விலையும் கடந்த பத்து நாட்களாக உச்சதில் தான் இருக்கிறது. சின்ன வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ 200 ரூபாய்க்கும் சில்லறை விற்பனையில் கிலோ 240 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
சென்னை கோயம் பேடு சந்தையில் சின்ன வெங்காயத்தின் விலை நேற்றைய விடஇன்று ஒரே நாளில் 30 ரூபாய் கூடியிருக்கிறது. நேற்று மொத்த வியாபாரத்தில்180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயம் இன்று 200 ரூபாயை தொட்டுள்ளது. சின்ன வெங்காயம் விலை ரூ 200 ஐ தொட்டு இருப்பது முதன் முறையாகும்.வரத்துக் குறைவால் சின்ன வெங்காயம் விலை மேலும் அதிகரிக்கும் என்று வியாபாரிகள் கூறியுள்ளனர்.
தக்காளி , வெங்காயம் மட்டுமின்றி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சமையல் எண்ணெய், இஞ்சி, பச்சை மிளகாய், சீரகம் போன்ற சமையல் பொருட்கள் விலையும் இது வரை இல்லாத அளவுக்கு உயர்ந்தே உள்ளது.
000