மத்தியப் பிரதேசத்தில் சிறுநீர் கழிக்கப்பட்டு, அவமதிக்கப்பட்ட இளைஞரின் காலை முதலமைச்சர் கழுவி சுத்தம் செய்தார்.
அந்த மாநில் பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாகி, பழங்குடியின இளைஞர் ஒருவர் மீது சிறுநீர் கழித்து அவமதித்த வீடியோ வைரலானது.
இந்த செயலுக்கு நாடுமுழுவதும் கண்டனங்கள் குவிந்தன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது மனித குலத்துக்கே வெட்கக் கேடான செயல் என்று கூறியிருந்தார். பாஜக பிரமுகரும் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இதையடுத்து மத்திய பிரதேச முதலமைச்சர் சவுகான், அந்த பழங்குடியின இளைஞரை அழைத்து அவரது கால்களை கழுவி சுத்தம் செய்தார் . பிறகு அவரிடம் நடந்த செயலுக்கு
மன்னிப்பும் கோரினார்.
இந்த ஆண்டு இறுதியில் மத்தியபிரதேசத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரையின் போது பழங்குடியின இளைஞர் மீது பாஜக பிரமுகர் சிறு நீர் கழித்தது ஒரு பிரச்சினையாக உருவெடுத்து விடக்கூடாது என்பதற்காக சவுகான் இந்த பாவ மன்னிப்பை செய்ததாக விமர்சனங்கள் எழுந்து உள்ளன.