ஜனவரி-03.
கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மனித மெட்டாப் நியூமோ வைரஸின் (HMPV) பரவலை சீனா எதிர்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதாக அந்த நாட்டு செய்திகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன, சிலர் மருத்துவமனைகள் மற்றும் தகன மேடைகள் நிரம்பி வழிகின்றன என்று கூறுகின்றனர்.
இன்ஃப்ளூயன்ஸா ஏ, எச்எம்பிவி, மைக்கோப்ளாஸ்மா நிமோனியா மற்றும் கோவிட்-19 உள்ளிட்ட பல வைரஸ்கள் பரவி வரும் வீடியோக்கள் ஆன்லைனில் பகிரப்படுகின்றன. இவற்றில் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிவதுப் போன்ற காட்சிகளும் இடம் பெற்று உள்ளன.
நிலைமையை சாமளிக்க சீனாவின் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
‘HMPV’ வைரஸ் , காய்ச்சல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துவதாக சொல்லப்படுகிறது. மேலும் கோவிட்-19 போன்ற அறிகுறிகளையும் இது வெளிப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிநது. வைரஸ் பரவி வருவதால் சீன நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், ராய்ட்டர்ஸின் செய்தி அறிக்கையில், சீனாவின் நோய் கட்டுப்பாட்டு ஆணையம் தெரியாத தோற்றம் கொண்ட நிமோனியாவுக்கு ஒரு கண்காணிப்பு அமைப்பை இயக்கி வருவது பற்றிய தகவல் இடம் பெற்று உள்ளது. குளிர் காலத்தில அதிரிக்கும வழக்கமான சில சுவாச நோய்களில் இதுவும் ஒன்று என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரஸ் முதன்முதலில் வெளிவந்தபோது குறைந்த அளவிலான நோய் தடுப்பு அமைப்புகளே இருந்தன. இப்போது அப்படி ஒரு பரவல் எற்பட்டால் அதைனை சமாளிப்பதற்கு அனைத்து வித முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளுக்கு சீனா அரசாங்கம் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.
*