சீனாவில் தீவிரமாகும் புதிய கொரோனா அலை – ஜூன் மாதம் உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

மே.27

சீனாவில் பரவிவரும் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை கொரோனா வைரசால், ஜூன் மாதத்தில் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும், வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்படும் ஆபத்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் பகுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், 2020-ம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை உருவாக்கியது.

தற்போது கொரோனா வைரசின் தாக்கம் குறைந்த நிலையில், உலக அளவிலான சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு விலக்கிக்கொண்டுள்ளது. இருந்தபோதும், கொரோனா பெருந்தொற்று முழுமையாக ஓய்ந்தபாடில்லை. மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் உள்ளிட்டோர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த சூழலில் கடந்த ஏப்ரல் இறுதியில் தொடங்கி சீனா முழுவதும் கொரோனாவின் ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போது வாரத்துக்கு 4 லட்சம் பேருக்கு தொற்று பரவி வருகிறது. வரும் ஜூன் மாதத்தில் இந்த தொற்றுப்பரவல் உச்சத்தை எட்டும். அப்போது, சீனாவில் வாரத்துக்கு 6.5 லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்படும் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து பெய்ஜிங் பல்கலைக்கழக மருத்துவமனையில் பணியாற்றும் மூத்த மருத்துவர் வாங் குவாங்பா கூறுகையில், “சீனாவில் புதிய கொரோனா அலை ஏற்பட்டிருப்பது உண்மைதான். ஆனால், அதன் பாதிப்பு தற்போது மிதமாகவே உள்ளது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது” என்றார்.

ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வகை கரோனா வைரஸை எதிர்கொள்ள புதிதாக 2 தடுப்பூசிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், விரைவில் மேலும்4 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என்றும் சீனாவின் நுரையீரல் தொற்று நிபுணர் ஜாங் நான்ஷான் தெரிவித்துள்ளார்.

.எனவே சீனாவில் இருந்து ஒமிக்ரான் எக்ஸ்.பி.பி. வைரஸ் உலக நாடுகளுக்கு பரவுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சீனாவின் அண்டை நாடுகள் உட்பட அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டி யது அவசியம் என சர்வதேசசுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

சீனாவில் ஏற்பட்டுள்ள புதிய கொரோனா அலை யால், சீனா, ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் பாதிப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *