ஜனவரி -06.
சீனாவில் உருவான HMPV வைரஸ் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இரண்டு பேருக்கு பரவி இருப்பதை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்து உள்ளது.
பெங்களூருவில் 3 மாத பெண் குழந்தையையும் 8 மாத ஆண் குழந்தையையும் இந்த வைரஸ் பாதித்திருப்பது தெரிய வந்து உள்ளது.
சுவாசக் கோளாறால் அனுமதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளையும் ஆய்வு செய்த போது அவர்களை HMPVவைரஸ் தாக்கி இருப்பது உறுதியானது.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் இது ஒன்றும் அச்சுறுத்தலுக்கு உரியது இல்லை என்று தொவித்து உள்ளது.
சீனாவில் கடுமையான குளிர் காலம் என்பதால் சில மாநிலங்களில் அதிகம் பேர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வருகின்றனா். அவர்களில் ஒரு சிலருக்கு HMPV வைரஸ் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.
இந்த வைராஸால் பாதிக்கப்படும் நபருக்கு மூச்சுத் திணறல், சளி ஓழுகுதல்,தொடா் இருமல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஒருவருக்கொருவர் தொட்டுக் கொள்வதன் மூலமும் வைஸால் பாதிக்கப்பட்ட பொருட்களை தொடுவதன் மூலமும் இது பரவக்கூடியது. இது நிமோனியா வகையை சேர்ந்தது ஆகும். HMPV வைரஸுக்கு இது வரை மருந்துகள் எதுவுமில்லை. இருப்பினும் திறம்பட கட்டுப்படுத்திவிட முடியும் என்று சீன சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கிறது.‘
சீனா அரசாங்கத்தின் அறிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் கொரோனாவை தொடர்ந்து அங்கு இன்னொரு வகைாயான வைர்ஸ் தோன்றியிருப்பதும் அது இந்தியாவுக்கும் பரவி இருப்பது அச்சத்தை ஊட்டுவதாக கருதப்படுகிறது.
*