ஜூன்.1
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தற்காலிகமாக பக்கம் முடக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டா என சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்கிவரும் நாம் தமிழர் கட்சியின் தங்களது ட்விட்டர் பக்கங்களில் அரசியல், சமூகம் சார்ந்த பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து பதிவு செய்துவருகின்றனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் திடீரென முடக்கப்பட்டுள்ளது. அவரது முடக்கப்பட்ட டிவிட்டர் பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல், அந்தக் கட்சியின் முக்கிய நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்திக், பாக்கியராஜன் சுனந்தா உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளது . சீமான் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் டிவிட்டர் கணக்கு முடக்கத்திற்கு நாம் தமிழர் கட்சியின் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டரில் பதிவு வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.