நவ-26,
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய பல்வேறு மாவட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நாளை தனியாக மாவீரர் நாள் பொதுக்கூட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்து உள்ளனர்..
நாம் தமிழர் கட்சியிலிருந்து பிரிந்து ‘தமிழர் ஒருங்கிணைப்பு குழு’ என்ற அமைப்பை ஏற்படுத்தி உள்ளவர்கள் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசினாார்கள்.
திருச்சியி்ல் நாளை நடைபெறும் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பத்தாயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறினார்கள்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் சீமானிடம் துளியும் ஜனநாயகமே கிடையாது. திரள் நிதி வசூலுக்கு எந்தவித கணக்கையும் நிர்வாகிகளிடம் காட்டுவதே இல்லை என்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் குற்றஞ்சாட்டினார்கள்.
சீமானுடையப் பேச்சை நம்பி 13 ஆண்டுகள் தங்களின் இளமையை, பொருளாதாரத்தை தொலைத்து விட்டோம் .எனவே அவரை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம் என்றும் தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகள் கேட்டுக் கொண்டார்கள்.
**