டிசம்பர்-30.
விஞ்ஞானிகளின் நெடு நாள் கனவுகளில் ஒன்றான சூரியனை நெருங்கிவிட வேண்டும் என்ற ஆசையை அமெரிக்காவின் விண் வெளி ஆய்வுக் கழகமான நாசா நிறைவேற்றி உள்ளது.
பூமியில் இருந்த படி நிலா,செவ்வாய் போன்ற கிரகங்களுக்கு எல்லாம் விண்கலங்களை அனுப்பி சோதனை செய்த விஞ்ஞானிகளால் சூரியனுக்கு மட்டும் அனுப்ப முடியமால் இருந்த குறை அகன்று இருக்கிறது.
இதற்கு முன்பு வரை சூரியனுக்கு ஏன் விண்கலத்தை அனுப்ப முடியவில்லை என்றால், அதன் மையத்தில் ஒன்றரை கோடி செல்சியஸ் வெப்பம் நிலவுவது தான். இந்த நிலையில் அமெரிக்காவின் நாசாவும் ஜெர்மனியும் இணைந்து உருவாக்கிய ஹீலியாஸ் 2 என்ற விண்கலம் கடந்த 1976- ஆம் ஆண்டு 14.96 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சூரியனை ஆராய்ச்சி செய்தது சாதனையாக இருந்தது. அதற்கு மேல் சூரியனின் பக்கத்தில் செல்ல முடியவில்லை.
இப்போது நாசாவின் பார்க்கர் விண்கலம் சூரியனின் அருகில் சென்று புதிய சாதனையை செய்து இருக்கிறது. கடந்த 2018- ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12- ஆம் தேதி அனுப்பப்பட்ட பார்க்கர் விண்கலம் சுமார் எட்டு ஆண்டுகள் பயணத்திற்குப் பிறகு கடந்த 27- ஆம் தேதி சூரியனுக்கு மிக அருகில் சென்றது. அதாவது 7.26 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தபடி சூரியனைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறது. மேலும் ஒரு வருடப் பயணத்திற்குப் பிறகு 2025- ஆம் ஆண்டு இதே டிசம்பர் மாதத்தில் சூரியனுக்கு இன்னும்அருகில் செல்லும். அதாவது சூரியனை 6.20 கோடி கிலோ மீட்டர் தொலைவுக்கு நெருங்கிவிடும்.
பர்க்கர் விண்கலம் சூரியனை இவ்வளவு அருகில் நெருங்குவது அறிவியல் உலகத்தின் மிகப்பெரிய சாதனையாகும். இன்னும் பல புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுக்கும்.
பார்க்கர் விண்கலம் அதனுள் பொருத்தப்பட்டு உள்ள அதி நவீன கருவிகள் மூலம் சூரியனைப் பற்றிய தகவல்களை மிகவும் துல்லியமாக சேகரிக்கும். பின்னர் அதனை ஒலித் துகள்களாக மாற்றி நாசாவிற்கு அனுப்பும். அந்த ஒலித் துகள்கள் நாசா ஆராய்ச்சி மையத்தில் படங்களாக மாற்றப்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.
*