ஆகஸ்டு,2-
இந்தி நடிகை கங்கனா ரனாவத் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காதவர்.சமூக வலைத்தளத்தில் எப்போதும் இயங்கி கொண்டிருப்பார்.
தமிழில் ‘சந்திரமுகி -2 ‘படத்தில் இப்போது நடிக்கிறார். மும்பையை, பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு இவர் கருத்து தெரிவித்து இருந்தார். இதனால் அங்குள்ள அரசியல்வதிகள் கோபத்துக்கு ஆளானார். தீவிரவாதிகள் அச்சுறுத்தலும் இருந்தது. இதனால் அவருக்கு மத்திய அரசு, ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கியது.
தனது இருப்பை பதிவு செய்து கொள்வதற்காக அவ்வப்போது வாய் திறக்கும் சுப்பிரமணியசாமி, கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினார். ’’பாலிவுட் நடிகர்களை கண்காணிப்பது எஸ்பிஜியின் வேலை அல்ல, அப்படி இருந்தும் கங்கனாவுக்கு இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஆச்சரியமாக உள்ளது என்று அவர் கூறினார்.
சும்மா இருப்பாரா கங்கனா? சுப்பிரமணியசாமிக்கு அவர் சுடச்சுட பதில் அளித்துள்ளார்.
“நான் பாலிவுட் நட்சத்திரம் மட்டுமல்ல சார். ஏழைகளுக்கு ஆதரவான மற்றும் அக்கறையுள்ள ஒரு குடிமகள். மகாராஷ்டிராவில் சில அரசியல்வாதிகள் எனக்கு எதிராக உள்ளனர்., காலிஸ்தானி குழுக்களை கடுமையாக கண்டித்துள்ளேன் -நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர், எழுத்தாளர், எனது அடுத்த திரைப்படத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேசவுள்ளேன்,என் உயிருக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் உள்ளதால் மத்திய அரசிடம் பாதுகாப்பை வேண்டினேன், அது கிடைத்துள்ளது, இதில் ஏதாவது தவறு இருக்கிறதா சார் ?” என்று அந்த பதிவில் கேட்டுள்ளார்,கங்கனா.
சரிங்க மேடம்.
000