ஜுன், 30 – சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த சூர்யவம்சம் கடந்த 1997 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.கிட்டத்தட்ட 26 ஆண்டுகள் ஆனாலும் பாடல்களும், கதைக்களமும், கேரக்டர்களும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன.
விக்ரமன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை மறு உருவாக்கம் செய்யும் முயற்சிகள் வேகமெடுத்துள்ள நிலையில் முதல் பாகம் குறித்த சில தகவல்கள்:
1997 ஆம் ஆண்டு வெளியான படங்களில் வசூல் சாதனை செய்த படம் இது மட்டுமே. சரத்துடன் மணிவண்ணன், ஆர்.சுந்தரராஜன்,ஜெய்கணேஷ்,நிழல்கள் ரவி,ஆனந்தராஜ், ராதிகா,தேவயானி,ப்ரியாராமன்,சிந்து ஆகி்யோரும் நடித்திருந்தனர்.
விக்ரமனின் ஆஸ்தான இசையமைப்பாளரான எஸ்.ஏ.ராஜ்குமார் கை வண்ணத்தில் உருவான மெட்டுக்கள் , தேன் சொட்டும் ரகம். ஜலக்கு ஜலக்கு சரிக சேல, நட்சத்திர ஜன்னலில், காதலா காதலா.ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ ஆகிய பாடல்கள் இப்போதும், சொக்க வைக்கின்றன.
வசனங்களில் விக்ரமன் விளையாடி இருப்பாரர்.
‘ ஒவ்வொருவரும் காசோ பணமோ பிச்சையா தருவாங்க.ஆனா இவரோ வாழ்க்கையையே சில பேருக்கு பிச்சையா கொடுத்திருக்கார்’’ என சரத்குமாரை குறிப்பிட்டு, ப்ரியாராமனை தேவயானி குத்திக்காட்டும் இடம் , கைத்தட்டல்களை குவித்தது.
இதே பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நன்றாக ஓடியது.
கன்னடத்தில் சூர்யவம்சா எனும் பெயரிலும் இந்தியில் சூர்ய வன்ஷம்’ எனும் பெயரிலும் ரீமேக் ஆனது.
இந்த படத்தின் அருமை பெருமைகளை இப்போது பகிர்ந்துள்ள சரத்குமார், இதன் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என தெரிவித்துள்ளார்.
யார் ஹீரோ, ஹீரோயின், யார் டைரக்டர், யார் தயாரிப்பாளர் போன்ற விவரங்களை அவர் சொல்லவில்லை. எனினும் சரத் , ஹீரோவாக நடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
பொன்னியின் செல்வனில் சரத்துக்கு பெயர் கிடைத்தாலும், ’சூர்யவம்சம்-2’ அவருக்கு மீண்டும் நாயகனாக 2- வது இன்னிங்சுக்கு வழி வகுக்குமா? என்பது தெரியவில்லை.
000