பிப்ரவரி-12.
அதிமுகவில் ஏற்கனவே நான்கு பிரிவுகள் உள்ளன. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி, இ்ட்டைஇலை சின்னம், அதிமுக கொடி போன்றவற்றை பயன்படுத்தும் அனுமதியை, தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்,சசிகலா ஆகியோர் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள். இவர்களுக்கு ஆங்காங்கே ,ஆட்கள் உள்ளனர். ஜெயிக்கும் சக்தி இல்லையென்றாலும், பழனிசாமியின் அதிமுகவை இவர்களால், தோற்கடிக்க முடியும் என்பதற்கு கடந்த மக்களவை தேர்தல் சாட்சி.
இப்போது, முன்னாள்அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் ஐந்தாவது அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இவர் எம்.ஜி.ஆர். காலத்து அரசியல்வாதி.எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே பூசல் எப்படி உருவானது .?.
பார்க்கலாம்.
அத்திக்கடவு – அவினாசி திட்ட கூட்டமைப்பு சார்பில், பழனிசாமிக்கு அன்னூரில் கடந்த 9 -ஆம் தேதி பாராட்டு விழா நடந்தது. முதல்வராக பழனிசாமி இருந்தபோது, அத்திக்கடவு அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக இந்த விழா நடந்தது. இந்த விழாவில் கே.செங்கோட்டையன் பங்கேற்காமல் புறக்கணித்தார்.
இந்த விழா தொடர்பான அழைப்பிதழிலில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறாததால் விழாவில் பங்கேற்கவில்லை என்று செங்கோட்டையன் விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், நேற்று தைப்பூசத்தை ஒட்டி பச்சைமலை முருகன் கோயிலுக்கு சென்று வழிபட்ட செங்கோட்டையன், அதன்பின், குள்ளம்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்து வீட்டுக்குச் சென்று ஓய்வு எடுத்தார்.
காலையில் அவர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்பி சத்தியபாமா உள்ளிட்ட அவரது அபிமானிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
செங்கோட்டையன், தனது ஆதரவாளர்களை திரட்ட ஆரம்பித்துள்ள நிலையில் , நேற்று இரவு 7 மணியளவில் ஒரு ஆய்வாளர் மற்றும் 3 போலீஸார் அடங்கிய குழுவினர், குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் தோட்டத்து வீட்டுக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செங்கோட்டையன் என்ன செய்யப்போகிறார் ?
காத்திருப்போம்.