புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் நிறுவப்படும் செங்கோலின் விலை எவ்வளவு என்பதை அறிந்தால் உங்களுக்கு வியப்பாக இருக்கும். அது மட்டுமல்ல இந்த சொங்கோலுக்கும் சோழ மன்னர்களுக்கும் என்ன சம்மந்தம்? அந்த செங்கோல் எந்த மன்னருடையது? இது போன்ற சந்கேங்களை அறிந்து கொள்வதற்கு தொடர்ந்து படியுங்கள்.

கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு செல்வோம். அப்போது ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டன், இந்திய பிரதமர் நேருவிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பார் என்று அறிவிப்பு வெளியானது. ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பது என்றால் எதாவது ஒன்றை மவுன்ட் பேட்டன் நேருவிடம் கொடுப்பதாக இருக்க வேண்டும். அது என்னவாக இருக்கலாம் என்று பலரும் யோசித்தனர்.

அப்போது ராஜகோபாலாச்சாரி எனப்படும் ராஜாஜி, “சோழர்கள் காலத்தில் மன்னர்கள் செங்கோல் வைத்திருப்பார்கள், அதையே தமக்கு அடுத்து ஆட்சிக்கு வருகிறவர்களிடம் கொடுப்பார்கள்.அது போன்ற ஒன்றை செய்து அதை மவுன்ட் பேட்டனிடம் தந்து கொடுக்கச் சொல்லலாம்”என்று நேருவிடம் சொன்னார்.ராஜாஜியின் இந்த யோசனை பிடித்துப் போனதால் உடனே செங்கோல் ஒன்றை செய்யுங்கள் என்று நேரு கேட்டுக்கொண்டாராம்.

ராஜாஜி இந்தப் பொறுப்பை திருவாடு துறைஆதினத்திடம் ஒப்படைத்தார். அவர், சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டியிடம் சொல்லி உடனே தங்கத்தில் செங்கோல் ஒன்றை செய்து தரும்படி கேட்டுக் கொண்டார். ஐந்து அடி நீளத்துடன் மேல் பகுதியில் நந்தி சிற்பத்துடன் செங்கோல் செய்யப்ப்பட்டது. அதை உம்மிடியிடம் இருந்து பெற்றுக்கொண்ட திருவாடு துறை ஆதினம் டெல்லி சென்று ராஜாஜியிடம் கொடுக்க முயற்சித்த போது அவர் அதை மவுண்ட்பேட்டனிடம் ஒப்படைக்கச் செய்தார்.

அதைதான் அவர், ஆகஸ்ட் 15 ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு ஆங்கிலேயரிடம் இருந்து ஆட்சி இந்தியருக்கு மாறியதற்கு அடையாளமாக நேருவிடம் கொடுத்தார்.

இப்படி ஒரு செய்தி பரவியது.

ஆனால் இது தவறான தகவல் என்று பல்வேறு தரப்பினரும் தெரிவித்து உள்ளனர்.

அவர்கள், “மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை நேரு பெற்றுக் கொண்டதாக எந்த தகவலும் அரசு ஆவணங்களிலோ அன்றைய நாளேடுகளிலோ இல்லை” என்கின்றனர்.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம்ஸ் இதழில் இந்திய சுதந்திரத்தின் போது வெளியான செய்தியும் இதை உறுதிப்படுத்துகிறது. “திருவாடுதுறை ஆதினம் செங்கோலை செய்து டெல்லிக்கு கொண்டு வந்து நேருவிடம் ஒப்படைத்தார். இதுஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை நடைபெற்றது. அப்போது புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞர் ராஜரத்தினம் பிள்ளை மற்றும் ஓதுவார் ஒருவர் உடனிருந்தார்” என்ற தகவல்தான் டைம்ஸ் இதழில் உள்ளது.

மேலும் ஒரு தகவல் என்னவெனில் செங்கோல் யோசனையை ராஜாஜிதான் சொன்னார் என்பதற்கான ஆதராம் அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலிலும் கிடையாது. அன்றைய பத்திரிகைகளிலும் இல்லை.

ஆட்சி அதிகாரம் மாறியதற்கு அடையாளமாக டெல்லி செங்கோட்டையில் பறந்த யூனியன் ஜாக் கொடி இறக்கப்பட்டு இந்திய தேசியக் கொடி தான் ஏற்றப்பட்டது. செங்கோல் கை மாறவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர்.

இதனால் மவுண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை நேரு பெற்றுக் கொண்டது உண்மை இல்லை என்பது தெரியவருகிறது. ராஜாஜிதான் இப்படி ஒரு யோசனையை சொன்னார் என்பதற்கும் ஆதாரங்கள் கிடைக்கவில்லை. எனவே இது முழுக்க முழுக்க திருவாடுதுறை ஆதினத்தின் ஏற்பாடுதான் என்பது தெளிவாகிறது.

அது இருக்கட்டும்..

பலரும் மறந்துப் போன இந்த தகவல் எப்படி உயிர் பெற்றது?

திருவாடுதுறை ஆதினம் செங்கோலை நேருவிடம் கொடுக்கும் அந்த பழைய படம் கடந்த 2018 ல் பத்திரிகை ஒன்றில் வெளியானது. அதில் உம்மிடி பங்காரு கடையில் செய்யப்பட்டதாக குறிப்பிடப் பட்டு இருந்தது. இதை அடுத்து உம்மிடி குடும்பத்தார் அந்த செங்கோல் எங்கு இருக்கிறது என்று தேட ஆரம்பித்தார்கள். நெடிய முயற்சிக்குப் பிறகு அது அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரியவந்தது.

இந்த தகவலை பிரதமர் மோடிக்கு தெரியவந்தபோது அது உண்மையா என்று விசாரிக்குமாறு அதிகாரிகள் இடம் கேட்டுக் கொண்டு இருந்தார். அவர்கள் உண்மை என்று தெவித்ததை அடுத்து செங்கோலை நாடாளுமன்றத்தி்ன் புதிய கட்டிடத்தில் வைப்பது என்பது முடிவாகி உள்ளது. இதனால் அலகாபாத் அருங்காட்சியகத்தில 75 ஆண்டுகளாக இருந்த செங்கோல் மீண்டும் அனைவரின் கவனத்திற்க்கு வந்து இருக்கிறது.

இது பற்றி உம்மிடி பங்காரு நிறுவனத்தின் உரிமையாளர் அமரேந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில் “சுதந்திரத்தின் போது எங்கள் தாத்தா செங்கோலை உருவாக்கி நேருவிடம் கொடுத்ததை நாங்கள் அறிவோம். அந்த செங்கோல் அலகாபாத்  அருங்காட்சியகத்தில் இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரியவந்தது. செங்கோலை நாடாளுமன்றக் கட்டிடத்தில் வைப்பது மகிழ்ச்சியா இருக்கிறது. செங்கோலில் நந்தி,மகாலெட்சுமி மற்றும் கொடி பொறிக்கப்பட்டு உள்ளது. இது எங்களுக்கு கிடைத்த பெருமை” என்றார்.

இந்த செங்கோல் தான் நாடாளுமன்றக் கட்டிடம் மே 28 ஆம் தேதி திறக்கப்படும் போது பிரதமர் மோடியிடம் வழங்கப்பட இருக்கிறது.பின்னர் அது சபாநாயகர் இருக்கை அருகே நிறுவப்படும். எனவே இந்த செங்கோல் சோழர் காலத்தைப் போன்றது, ஆனால் சோழர் காலத்தில் செய்யப்பட்டது இல்லை.

சிறப்புக்கு உரிய இந்த செங்கோல் 1947 ஆம் ஆண்டு மதிப்பில் 15 ஆயிரம் ரூபாய். ஆனால் அது எவ்வளவு தங்கத்தால் செய்யப்பட்டது என்ற விவரம் இல்லை

செங்கோல் என்றால் செம்மையான கோல் என்று பொருள்.

 

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *