சென்னை காவேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை வெற்றி கரமாக முடிந்தது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் மூன்று இடங்களில அடைப்புகள் இருப்பதாக கடந்த வாரம் மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இதற்கான பை பாஸ் அறுவை சிகிச்சை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் டாக்டர் ரகுராம் தலைமையில் இன்று காலை 5 மணிக்கு ஆரம்பமானது.
சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சை காலை 10 மணிக்கு முடிவுக்கு வந்தது. அந்த ஐந்து மணி நேரமும் அவருடைய உறவினர்கள் பயத்திலேயே இருந்தனர். சிகிச்சை நல்லபடியாக முடிந்தவிட்டாலும் செந்தில் பாலாஜி இனி வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுக்க வேண்டியிருக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அவர் இன்னும் ஒரு வாரம் அங்கேயே தங்கி சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
அப்படியானால் அமலாக்கத் துறை விசாரணை என்னவாகும் ?
000