செந்தில் பாலாஜிக்கு ஆபரேஷனே நடக்கல, எல்லாமே நாடகம்….பகீர் கிளப்பும் பிரேமலதா!

ஜூன் – 27

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை எனச் சொல்லப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் திடுக்கிடும் தகவல் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடைபெறவில்லை எனச் சொல்லப்படுவதாக பிரேமலதா விஜயகாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.  செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “அரசு மருத்துவமனையில் இருந்த செந்தில் பாலாஜி அமைச்சர் நேருவுக்கு சொந்தமான தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருப்பது அரசு மருத்துவமனையின் நம்பகத்தன்மையைக் கேள்வி எழுப்புகிறது. அப்படி என்றால் அரசு மருத்துவமனை தரமில்லை என்று இந்த அரசே ஒப்புக் கொள்கிறதா? அமைச்சர் என்றால் ஒரு நிலைப்பாடு, பொதுமக்கள் என்றால் ஒரு நிலைப்பாடா? செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை நடக்கவேயில்லை என்று பலரும் கூறுகின்றனர். அதனால் இதனை அனைத்தையும் அமலாக்கத்துறை விசாரித்து தெளிவுபடுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *