சட்ட விரோத பணப்பறிமாற்ற வழக்கில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தினமும் பழம் உள்ளிட்ட உணவுகள் வழங்கப்படுகிறது.
கடந்த மாதம் 14-ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், நெஞ்சு வலி ஏற்பட்டதால் முதலில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் இதய அறுவை சிகிச்சை நடந்தது.
சுமார் ஒரு மாத காலம் சிகிச்சையில் இருந்த செந்தில் பாலாஜி திங்கள் கிழமை அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு விசாரணை கைதிகளுக்கான சிறையில் முதல் வகுப்பு அறை தயார் செய்யப்பட்டது. இருப்பினும் அவரது உடல் நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் சிறை மருத்துவமனையிலேயே மருத்துவ கண்காணிப்பில் இருப்பதற்கு அனுமதித்தனர்.
மருத்துவ மனையில் உள்ள அவருக்கு தனி கட்டில், மேஜை, நாற்காலி போன்ற வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளன.சப்பாத்தி, இட்லி, உப்புமா உள்ளிட்டவை காலை மற்றும் இரவு நேர உணவுகளாக வழங்கப்படுகிறது. அதே போல் மதிய வேளையில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய கிழமைகளில் கோழிக்கறியும் மற்ற நாட்களில் சைவ உணவும் தரப்படுகிறது. பெரும்பாலும் மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி பட்டியலில் உள்ள சைவ உணவுகளே கொடுக்கப்படுகிறது.
இது பற்றி தகவல் வெளியிட்டு உள்ள புழல் சிறை வட்டாரம். சிறைக் கைதிகளுக்காக சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள உணவுகளையே அமைச்சர் செந்தில் பாலாஜி எடுத்துக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறது.
000