செந்தில் பாலாஜிக்கு பெரும் பின்னடைவு.. அமலாக்கத் துறை விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி.

ஆகஸ்டு,07-

அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மிகப்பெரிய சட்டப் போராட்டத்தை நடத்தியும் பலனில்லாமல் போய்விட்டது. அவரை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை புழல் சிறையில் அடைக்கப்ட்டு இருக்கும் செந்தில் பாலாஜி இன்றே காவலில் எடுத்து விசாரணை நடத்த  ஆயத்தமாகிவிட்டது அமலாக்கத்துறை. வருகிற 12- ஆம் தேதி வரை அவரிடம் விசாரணை நடத்தப்படும். இந்த விசாரணையின் போது அவரிடம் கேட்கப்பட வேண்டிய கேள்விகளை அமலாக்கத்துறை  ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கிறது.

கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த போது அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை தருவதாகக் கூறி பணம் வசூலித்தார் என்பது புகாராகும். இது தொடர்பான வழக்கை நீதிமன்றம் சில மாதங்கள் முன்பு தள்ளுபடி செய்ய மறுத்துவிட்டது.  இதையடுத்து இந்த விவகாரத்தில் சட்ட விரோத பணப்பறிமாற்றம் நடந்திருப்பதாக கூறி கடந்த ஜுன் மாதம் 13- ஆம் தேதி செந்தில் பாலாஜியின் சென்னை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.  மறு நாள் அவர் கைது செய்யப்பட்டார்.

அப்போது அவர் தமக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால் முதலில் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும் பின்னர் தனியார் மருத்துவமனையான காவேரியிலும் அனுமதிக்கப்ட்டார். அங்கு அவருக்கு பை பாஸ் அறவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின் சில நாடகள் மருத்துவ மனையில் தங்கி இருந்த அவர் உடல் நிலை ஓரளவு குணம் அடைந்ததால் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

வழக்குகள்.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் என்று கூறி அவருடைய மனைவி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு நீண்ட விசாரணைக்குப் பிறகு தள்ளுபடி ஆனது.

போலிசுக்கு உள்ளது போன்று ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்கும் அதிகாரம் அமலாக்கத்துறை அமைப்புக்கு இல்லை, எனவே செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியாது என்றும்  உயர் நிதிமன்றத்தில் தெரிவி்க்கப்பட்டது. இந்த கருத்தும் ஏற்கப்படவில்லை.

கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் தான் ஒருவரை காவலில் எடுத்து விசாரிக்க முடியும் .செந்தி்ல் பாலாஜி கைது செய்யப்பட்டு 15 நாட்களை கடந்து விட்டதால் அவரை இனிமேல் காவலில் எடுத்து அமலாக்கத் துறை விசாரிக்க முடியாது என்றும் வாதிடப்பட்டது.  இதனையும் உயர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

இந்த உத்தரவுகள் அனைத்துக்கும் எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீ்ட்டு மனுக்களை  விசாரித்த உச்சநீதிமன்றம் அவருடைய தரப்பு கோரிக்கைகளை நிராகரித்து விட்டது. மேலும் அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்துறைக்கு அனுமதி கொடுத்து தீர்ப்பளித்து இருக்கிறது.

இனி அவர், அமலாக்கத்துறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி தான் ஆக வேண்டும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *