ஆகஸ்டு,14-
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அவருடைய சகோதரர் அசோக், அசோக்கின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லஷ்மி ஆகியோர் தான் மூளையாக செயல்பட்டுள்ளனர் என்று அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.
அறிக்கையில் அமலாக்கத்துறை மேலும் கூறியிருப்பதாவது..
அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமார் இன்னும் கைது செய்யப்படவில்லை . அவரை அமலாக்கத்துறை தேடி வருகிறது. இந்த நிலையில் அசோக் குமார் கேரள மாநிலம் கொச்சியில் கைது செய்யப்பட்டதாக வெளியான தகவல் உண்மையல்ல.
செந்தில் பாலாஜி வழக்குத் தொடாபாக அசோக்குமாருக்கு நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்,பொருத்தமற்ற காரணங்களை கூறி ஆஜராகவில்லை. இதேபோல், அவரது மனைவி நிர்மலா மற்றும் அவரது மாமியார் லட்சுமி ஆகியோருக்கும் 4 முறை சம்மன் அனுப்பி ஆஜராகவில்லை.
இந்த மூன்று நபர்களும் சட்ட விரோத பணப்பறிமாற்றத்தில் ஈடுபட்டதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜின் சகோதரர் அசோக், அசோக்கின் மனைவி நிர்மலா, அவரது மாமியார் லஷ்மி ஆகியோர் தான் குற்றத்திற்கு மூளையாக செயல்பட்டுள்ளனர் .
இவ்வாறு அமலாக்கத் துறை தொிவித்து உள்ளது.
000