செந்தில் பாலாஜியின் கதறலைக் கண்டு மகிழ்ந்த திமுக நிர்வாகிகளின் பட்டியல்.

 

புலி படுத்துவிட்டால் குடித்தனம் நடத்த பூனைக் கூப்பிடும் என்பார்கள். அது போலத்தான் செந்தில் பாலாஜியின் கதையும்.

அவர், இதற்கு முன்பு நான்கு கட்சிகளில் குப்பைக் கொட்டிவிட்டு ஐந்தாவதாக வந்து சேர்ந்த கட்சிதான் திமுக என்று அண்ணாமலை சொல்லி இருக்கிறார். செந்தில் பாலாஜி இதற்கு முன்பு அண்ணா திமுகவில் அமைச்சாராக இருந்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.அதற்கு முந்தைய மூன்று கட்சிகள் எவை என்று தெரியவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் இருந்தால் சரிப்படாது என்று திமுகப் பக்கம் வந்த செந்தில் பாலாஜியின் வளர்ச்சி என்பது மிகப்பெரியது. திமுகவில் காலம் காலமாக செல்வாக்குடன் இருக்கும் பெருந்தலைகளை எல்லாம் கொஞ்சம் ஓரமாக இருக்கச் சொல்லிவிட்டு முதலமைச்சர் குடும்பத்தின் நம்பிக்கையைப் பெற்றதுதான் செந்தில் பாலாஜி பெற்ற முதல் வெற்றி.

அடுத்ததாக சட்ட மன்றத் தேர்தலில் வென்று திமுக ஆட்சி அமைக்கும் போது மின்சாரம் மற்றும் கலால் (டாஸ்மாக்) இலாகக்களைப் பெற்றது அவருடைய இரண்டாவது வெற்றி.

எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கால் மேற்கு மாவட்டங்களில் திமுகவுக்கு சட்ட மன்றத் தேர்தலில் சொல்லிக் கொள்ளும் படி வெற்றிக் கிடைக்கவில்லை. இது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரிய குறையாக இருந்தது. அவர், அடுத்த வந்த உள்ளாட்சித் தேர்தலில் கோவை,திருப்பூர் போன்ற மேற்கு மாவட்டங்களை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்தார். பம்பரமாகச் சுழன்று செய்ய வேண்டியதைச் செய்து அந்த மாவட்டங்களில் அண்ணா திமுகவை ஓரங்கட்டி திமுகவை வெற்றிப் பெறச்செய்தார் செந்தில் பாலாஜி. இது அவருடைய மூன்றாவது வெற்றி என்றுச் சொல்லாம்.

இப்படி திமுகவின் முக்கிய சக்தியாக உருவெடுத்த செந்தில் பாலாஜி மீது திமுகவின் முக்கிய பிரமுகர்கள் எல்லாம் பொறாமை கொள்வது இயற்கைதானே. விளைவு, அவரை மறைமுகமாக விமர்சனங்களும் செய்தனர். இந்தச் சூழலில்தான் அவருக்கு வேண்டியவர்கள் வீட்டில் இரண்டு வாரங்கள் முன்பு வருமான வரிச் சோதனை நடைபெற்றது. அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், செந்தில் பாலாஜி தொடர்பான இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்திய போது அதிகம் மகிழ்ந்தவர்கள் திமுக அமைச்சர்கள் என்று சொன்னார். இது ஓரளவு உண்மைதான்.

இன்னொன்று..

செந்தில் பாலாஜி மின் துறை அமைச்சரானவுடன் அந்தத் துறையில் பல ஆண்டுகளாக ஒப்பந்த வேலை செய்தவர்களை ஓரங்கட்டினார். அந்த இடத்தில் தனக்கு வேண்டிய அதிலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்தத் தாரர்களை கொண்டு வந்தார். இது பல மாவட்டங்களில் புகைச்சலை ஏற்படுத்தியது.

அடுத்தது..

டாஸ்மாக் மது பான கடைகளுடன் கூடய பார்கள் ஏலத்துக்கு வந்தது. இதில் உள்ளூர் திமுகவினர் பங்கேற்க முடியாமல் செந்தில் பாலாஜியின் கரூர் படை பார்த்துக் கொண்டதாம். அந்த பார்கள் பெரும்பாலும் கரூர் மாவட்த்தைச் சேர்ந்த ஆட்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இதை அல்லாமல் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அனுமதி இல்லாமல் ஏராளமான பார்கள் முளைத்தன. இவைகளும் செந்தில் பாலாஜியின் கரூர் ஆட்களால் நடத்ததப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக நிர்வாகிகள் ஏமார்ந்துப் போனார்கள். அமைச்சர்கள், மாவட்ச் செயலாளர்கள் செய்வதறியாது திகைத்தார்கள்.

“கட்சி நடத்துவதற்கும் போஸ்ட்டர் ஒட்டுவதற்கும் தேர்தல் வேலைகளைச் செய்வதற்கும் மட்டும் நாங்கள் தேவை, ஆனால் டாஸ்மாக் பார் நடத்த மட்டும் கரூரில் இருந்து ஆட்கள் வருவார்களா?” என்று திமுக உள்ளூர் ஆட்கள் குமுறினார்கள். கொந்தளித்தார்கள்.

இப்படி செந்தில் பாலாஜியின் வளர்ச்சிப் பிடிக்காத திமுக நிர்வாகிகள், மின்சார வாரிய ஒப்பந்தங்களை எடுத்து வேலை செய்து பிழைக்க முடியாமல் போன ஒப்பந்தத்தாரர்கள், டாஸ்மாக் பார்களை நடத்த முடியாமல் ஏமாற்றம் அடைந்த உள்ளூர் திமுகவினர் என ஒரு பெரும் பட்டாளமே அவருக்கு எதிராக அணி திரண்டு இருப்பதாக ஒரு கருத்து நிலவி வந்தது.

ஜெயக்குமார் சொன்னது போல வருமானத் துறை வரித்துறை சோதனை நடத்திய போது ஓளரவு மகிழச்சி அடைந்த திமுகவினர் இப்போது அமலாக்கதுறை செந்தில் பாலாஜியை கைது செய்திருப்பதால் இன்னும் மகிழ்ச்சிக்கு போய் இருப்பதாக தகவல் உலவுகிறது.

இவர்கள் செய்த இன்னொன்று, கைது செய்து அழைத்து வரும் போது செந்தில் பாலாஜி கதறி அழும் வீடியோவை மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ச்சி அடைந்தது தான்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *