பிப்ரவரி- 12, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கிய ஜாமீன் தீர்ப்பை திரும்பப் பெறக்
கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் எழுப்பி உள்ள கேள்விகள் அவர் பதவியில் நீடிக்க முடியுமா என்ற சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் வேலை கொடுப்பதற்கு பணம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டதால் அவர் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஓராண்டுக்கு பிறகு உச்ச நீதிமன்றம் ஜாமீன் கொடுத்ததை அடுத்து அவர் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றார்.
இதனால் ஊழல் வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டியவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே அவருடைய ஜாமீனை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.
இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள்,
அமைச்சராவதில் செந்தில் பாலாஜிக்கு
என்ன அவசரம்? என்று கேட்டார்கள்.
மேலும், போக்குவரத்துத் துறையில் வேலைக்கு
லஞ்சம் பெற்ற வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை கேட்டு சொல்லுங்கள்
200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சாட்சிகளாக இருக்கும்போது, அமைச்சராக தொடர்ந்தால் என்னவாகும்? என்ற வினாக்களையும் எழுப்பினார்கள்.
இதன் பிறகு அமைச்சராக தொடர்வதா, இல்லையா என்பதை செந்தில் பாலாஜி முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர்.
எது எப்படி இருந்தாலும் உச்ச நீதிமன்றம் எழுப்பி உள்ள கேள்விகளை அடுத்து தார்மீக நெறிகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பது ஆரோக்கியமானது அல்ல என்று பொது வெளியில் கருத்து நிலவுகிறது.