சென்னையில் ஆளுநர் ஆர்.என். ரவி பிறந்தநாள் விழா – இளம் எழுத்தாளர் உட்பட 11 சாதனையாளர்களுக்கு விருது

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பிறந்தநாள் விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கொண்டாடப்பட்டது. அதில், கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவரும் இளம் எழுத்தாளருமான ரித்விக் பாலா உள்ளிட்ட 11 பேருக்கு இளம் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தமிழக ஆளுநரின் பிறந்தநாள் விழாவையொட்டி, கிண்டியில் உள்ள ராஜ்பவனில் இளம் சாதனையாளர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஸ்காட்டிஷ் பைரேட்ஸ் அண்ட் தி டெட்லி டிராகன்’ புத்தகத்தின் இளம் எழுத்தாளர் ரித்விக் பாலா பங்கேற்றார். இந்த விழாவில் கலந்து கொள்ள மாநிலம் முழுவதிலும் இருந்து 28 இளம் சாதனையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அங்கு, அவர்கள் புரிந்த சாதனைகளுக்காக விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அந்த வகையில், கோவையை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவர் ரித்விக் பாலா இந்த விருது வழங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர்-ல் மாணவர் ரித்விக் பாலா ‘அட்வென்ச்சர்ஸ் ஆஃப் ஸ்காட்டிஷ் பைரேட்ஸ் அண்ட் தி டெட்லி டிராகன்’ என்ற தலைப்பில் புனைவு கதையை எழுதி வெளியிட்டார். தனது முதல் புத்தகத்தின் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது ஒரு அறிவியல் புனைவு கதை எழுதுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இளம் வயதில் மாணவரின் சாதனையைப் பாராட்டி, ராஜ்பவனில் இளம் சாதனையாளர்களுக்கான விருதை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.

விருதுபெற்றது குறித்து பேசிய மாணவர் ரித்விக், இந்த நிகழ்ச்சியின்போது ஆளுநரிடம் எனது புத்தகத்தை சமர்பிக்கும் அதிர்ஷ்டம் கிடைத்தது. அவர் எனக்கு பாராட்டுத் தெரிவித்தார். இது ஒரு மகிழ்ச்சியான தருணம். ஒரு பரந்த அளவிலான சாதனைகளை ஆராய்வதற்கான ஒரு தளமாக இருந்தது.

தற்போது புனைவு கதை ஒன்றை எழுதி வருகிறேன். பள்ளி படிப்பு, தேர்வு ஆகியவற்றால் எனது எழுத்து பணி மெதுவாக நடக்கிறது. எனது அறிவியல் புனைவு கதைக்கான உந்துதல் ராபின் குக் மற்றும் வேறு சில புகழ்பெற்ற எழுத்தாளர்கள்தான். எனக்கு முழு உத்வேகத்தை அளிப்பது எனது தந்தைதான். எனது இரண்டாவது புத்தகம் எழுதுவதற்கு, அதிக நேரம் எடுக்கிறது. என்னைப் பொறுத்தவரை, கால அளவு முக்கியமல்ல..இறுதி முடிவுதான் முக்கியம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *