அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிககப்பட்டு வருகிறது.
அவருக்கு இதயத்தில் இருந்த நான்கு அடைப்புகள் காரணமாக கரோனரி தமணி அறுவை சிகிச்சை சென்னை காவிரி மருத்துவமனையில் புதன் கிழமை காலை நடைபெற்றது. அதன் பிறகு அதே மருத்துவமனையில் Advanced cardio care unit என்ற தீவிர சிகிச்சை பிரிவில் செந்தில் பாலாஜியை வைத்து மருத்துவர்கள் கண்காணிப்பு மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்னும் இயல்பான சிகிச்சைக்கு மாறவில்லை. அவருக்கு செயற்கை சுவாசம் அளிப்பதற்கான வெண்டிலேட்டர் கருவிப் பொருத்தப்பட்டு உள்ளது. அறுவை சிகிச்சை முடிவடைந்த 24 மணி நேரம் இதயத்திற்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் சுவாசிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதனால் அவருக்கு இன்று பிற்பகலுக்குப் பிறகு ஆக்சிஜன் உதவியுடன் சுவாசிபபதற்காக ஏற்பாடு நடைபெறும். இதன் பின்னரே செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு, இயக்கையாக சுவாசிக்க துவங்குவார். அதன் பின்னர் இதயம் படிப்படியாக தாமாகவே செயல்பட துவங்கும். இரத்தக் குழாயில் இருந்த அடைப்பு அகற்றபட்டதால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு இயல்பாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
000