தமிழ்நாட்டில் கடந்த எட்டு நாட்களாக நடைபெற்ற வந்து ஜல்லி ,எம் சாண்ட் தயாரிப்பாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் திரும்பப் பெறப்பட்டு இருப்பதால் கட்டுமானப் பணிகளில் நிலவிய தேக்கம் முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த 26- ஆம் தேதி முதல் கல்குவாரிகள், கிரஷர், டிப்பர் லாரிகளின் உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனார். எட்டு நாட்களாக நீடித்த இந்த போராட்டதால் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் ஜல்லி மற்றும் எம். சாண்ட் போன்றவற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாட்டால் கட்டுமான பணிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகின,
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணுமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ள்ளிட்டோர் அரசை வலியுறுத்தி இருந்தனர். இதையடுத்து கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கல்குவாரி உரிமையாளர்களை அழைத்து் பேச்சு நடத்தினார். அப்போது அவர் அளித்த உறுதிமொழியை ஏற்று வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது.
இது பற்றி தமிழ்நாடு கல்குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்னசாமி ,”அமைச்சர் துரைமுருகன் மற்றும் கனிமவளத்துறை செயலாளர் எங்களுக்கு ஒரு கமிட்டி அமைத்து அத்தனை கோரிக்கைகளையும் பரிசீலித்து நிறைவேற்றி கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர், அதனால் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.
வேலை நிறுத்தம் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்ட போதிலும் தொழிலாளர்கள் அனைவரும் பணிக்குத் திரும்பி குவாரிகள் பழையபடி இயங்குவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும். அதன் பிறகே ஜல்லி,எம் சாண்ட் போன்றவை தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.
000