‘இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமாருடன்
எனக்கு எந்த வித தொடர்பும் இல்லை’ என்று
நடிகை திவ்யபாரதி திட்டவட்டமாக
தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில், முன்னணி இசை அமைப்பாளராக
இருப்பவர் ஜி.வி.பிரகாஷ் குமார். கதாநாயகனாக நடித்தும்
வருகிறார்.
அண்மையில் இவர், தனது மனைவி, சைந்தவியை
விவகாரத்து செய்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில்இருக்கிறது.
தன்னுடன் நடித்த நடிகை திவ்யபாரதியுடன்
உள்ள தொடர்பு காரணமாக மனைவியை ஜி.வி.பிரகாஷ், பிரிந்தார் என ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள்
வெளியாகி வருகிறது.இதனை இருவருமே மறுத்தார்கள்.
ஆனால், இது தொடர்பான செய்திகள் ஓயவில்லை.
இதனால் கடும் ஆத்திரம் அடைந்துள்ள .நடிகை திவ்யபாரதி தனது இன்ஸ்டாகிராம்பக்கத்தில்,காட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில்,’எனது பெயர், தனிப்பட்ட குடும்ப விவகாரத்தில் இழுக்கப்பட்டு இருப்பதற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
ஜி.வி.பிரகாஷின் குடும்ப விவகாரத்துக்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. மேலும், வெளிப்படையாகச் சொன்னால், நான் எந்தவொரு நடிகருடன் டேட்டிங் செய்ய மாட்டேன், நிச்சயமாக திருமணமான ஆணுடனும் இல்லை.
இதுவரை அமைதியாக இருந்தேன்- ஆனால், இது
எல்லை மீறி போய்விட்டது-எனது நற்பெயருக்கு
களங்கம் ஏற்படுத்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள்
இதனை நான் முற்றிலுமாக மறுக்கிறேன்.
நான் சுதந்திரமானவள்பொய்யான கருத்துகளை பரப்புவதை நிறுத்துங்கள்‘ என்று திவ்யபாரதி தெரிவித்துள்ளார்.
—