மே.30
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 15ம் தேதி சென்னை வருகிறார். சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை அவர் திறந்து வைக்கவுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மருத்துவமனையை திறந்துவைப்பதற்காக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்திருந்தார்.
இதனிடையே, குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணம் காரணமாக ஜூன் 5ல் மருத்துவமனையை திறந்துவைப்பதில் சிக்கல் இருப்பதாகவும், இதனால் அவர் திறப்பு தேதி மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஜூன் 15-ம் தேதி சென்னை வருகிறார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகம் வரும் குடியரசுத் தலைவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவில் பங்கேற்று, அதனை திறந்து வைக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.