ஷங்கர் இயக்குநராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தை குஞ்சுமோன் தயாரித்தார்.
முதலில் சரத்குமார் ஹீரோவாக நடிப்பதாக இருந்த இந்தப்படத்தில், பின்னர் அர்ஜுன் நடித்தார்,அவருக்கு சினிமாவில் புதுவாழ்வை பெற்றுக்கொடுத்த அந்த படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். பாலகுமாரன் வசனம் எழுதினார்.
படம் இமாலய வெற்றி பெற்றதால் ஷங்கருக்கு வீடும் காரும் பரிசாக வழங்கினார் குஞ்சுமோன். ஒவ்வொரு உதவி இயக்குநருக்கும் ஸ்கூட்டர் அளித்தார். இந்தபடத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. ‘ஜென்டில்மேன்-2’ என்ற பெயரில் தயாராகும் இந்த படத்தையும் . குஞ்சுமோனே தயாரிக்கிறார். ஆனால் இயக்குனர் ஷங்கர் அல்ல. கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கிறார்.
கீரவாணி இசையமைக்கும் இந்தபடத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். அவர் இதற்காக கேரள மாநிலம் கொச்சியில் தங்கி பாடல்கள் எழுதிக்கொண்டிருக்கிறார், இதனை கவிஞரே தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கொச்சியில் இருக்கிறேன் ஜென்டில்மேன் 2 படத்திற்குப் பாட்டெழுதுகிறேன் ஆஸ்கர் விருதுக்குப் பிறகு கீரவாணி(மரகதமணி) இசையமைக்கும் முதல் தமிழ்ப்படம். அதிகாலைப் பறவைகளாய்ப் பாடிக் கொண்டிருக்கிறோம். கோகுல் கிருஷ்ணா இயக்குகிறார். குஞ்சுமோன் படத்துக்குக் குறையிருக்குமா பாட்டுக்கு? விரைவில் அர்ப்பணிக்கிறோம் நாட்டுக்கு” என்று வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.
000