ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 28 வகையான பொருட்கள் மாயமனாது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
கடந்த 1991 – ஆம் ஆண்டு முதல் 96- ஆண்டு வரை ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக 1996-ஆம் ஆண்டு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி,வளாப்பு மகன் சுதாகரன் ஆகியோர் மீது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்களில் ஜெயலலிதா காலமாகிவிட்டதால் மற்ற மூவரும் சிறைத் தண்டனையை அனுபவித்து முடித்து விட்டனர்.
வழக்குப் பதிவு செய்யப்பட்ட போது ஜெயலலிதா வீட்டில் இருந்து தங்கம், வைரம் உட்பட விலை மதிப்பு மிக்க பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த நிலையில் சமூக ஆர்வலரான நரசிங்க மூர்த்தி வழக்கு தொடர்ந்ததை அடுத்து பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்ற உத்தரவு ஓன்றை பிறப்பித்தது. அதன் படி பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விட கர்நாடக அரசு சார்பில் கிரண் எஸ்.ஜவாலியா அரசு வழக்கறிஞராக நியமனம் செய்யப்பட்டார். அவர் ஏலம் விடுவதற்காக பொருட்களை ஆய்வு செய்து ஜெயலலிதா வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களில் 30 கிலோ எடையுள்ள தங்கம், வைரம், மரகதம், ரூபி, முத்துகள் போன்ற ஆபரணங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினார். ஆனால் பறிமுதல் செய்யப்பட்டவற்றில் 11 ஆயிரத்து 344 புடவைகள், 250 சால்வைகள், 750 ஜோடி காலணிகள், விலையுயர்ந்த கடிகாரங்கள், பரிசு பொருட்கள் என 28 வகை பொருட்கள் இல்லை என்று தெரிவித்தார். இந்த பொருட்கள் தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் கட்டுப்பாட்டில் இருந்தால் அவற்றை கர்நாடகா நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் நரசிம்ம மூர்த்தி கேட்டுக்கொண்டு உள்ளார்.
ஆனால் இந்த பொருட்கள் தங்களிடம் இருக்கிறதா என்பதை தமிழக லஞ்சஒழிப்பத் துறை போலீஸ் இது வரை உறுதிப்படுத்தவிலலை.
000